Sunday, June 17, 2012

விடுதலைப்புலிகளின் கண்ணிவெடி பொறிமுறைகளைப் பார்த்து வியந்த கண்ணிவெடியகற்றும் பிரிவினர்.

முகமாலை முன்னரங்கப் பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மட்டும் 2வருடங்கள் தேவை எனத் தெரிவித்துள்ள மனிதநேய கண்ணிவெடியகற்றும் நிறுவனமொன்று, அதியுச்ச யுத்தம் நடைபெற்ற பகுதியென்பதால், இந்தப் பகுதியில் கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமாக இருப்பதாகவும் முழுமையாக கண்ணிவெடியகற்ற 7வருடங்கள் தேவை எனவும் தெரிவித்திருக்கின்றனர்.



குறித்த நிறுவனமே நாகர்கோவில் பகுதியில் கண்ணிவெடியகற்றல் செயற்பாடுகளை முடித்துள்ள நிலையில் அடுத்தபடியாக முகமாலை முன்னரங்கப் பகுதியில் தனது பணியினை ஆரம்பித்திருக்கின்றது. இதேவேளை ஏற்கனவே இராணுவத்தினரின் நிலைகளில் கண்ணிவெடியகற்றல் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது விடுதலபை;புலிகளின் நிலைகளில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந்நிலையிலேயே கண்ணிவெடியகற்றல் மிகவும் கடினமானதாக இருப்பதாக குறித்த நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. விடுதலைப்புலிகள் மிகவும் நுண்ணியமாகவும், அபாகரமான முறையிலும் கண்ணிவெடி பொறிகளை அமைத்திருக்கின்றனர். குறிப்பாக கவச எதிர்ப்பு கண்ணிவெடிகளை அதிகம் பொருத்தியுள்ளதுடன், பொறிவெடிகளை பரவலாகவும் பொருத்தியுள்ளனர். எனவே இது கண்ணிவெடியகற்றலுக்கு மிகப்பெரும் சவாலாக மாறியுள்ளது.

இந்தக் காரணத்தினாலேயே யுத்தம் நடைபெற்ற ஏனைய பகுதிகளைவிடவும், குறுகிய நில அளவுள்ள முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றலுக்கு மிக நீண்டகாலம் தேவைப்படும் எனஅவர்கள் மேலும் தெரிவித்திருக்கின்றனர்.

No comments:

Post a Comment