Friday, July 20, 2012

பிரதமர் இந்திரா காந்தி 1983 கலவரங்களுக்குப் பின்னர் ஒரு சுதந்திர தமிழீழத்தை முன்மொழிந்தார்-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

tamil_eelam_001விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு செயலற்ற அமைப்பு ஆகிவிட்டனர் என இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் விரோதமான நடவடிக்கைககள் எதுவும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1983 கலவரங்களுக்குப் பின்னர் ஒரு சுதந்திர தமிழீழத்தை முன்மொழிந்தார்.
இந்த முயற்சியை மீண்டும் செயற்படுத்துவது பற்றி இந்தியா சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர். மேலும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
இந்தியாவிற்கு இதனால் இரண்டு நன்மைகள் உண்டு என்றும் ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
1. இந்து சமுத்திரத்தில் ஈழ மக்கள் ஒரு நிரந்தர நண்பராக இருப்பார்கள்
2. வர்த்தகத் துறையில் நட்புறவைப் பேணுவர்.
2012 ஜூலை 16 இந்துப் பத்திரிகையில் உள்துறை அமைச்சர் சிதம்பரம், “தமிழீழம்” என்பது எங்கு அமைந்தாலும் அது இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கூறி, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கான தடையை மேலும் நீடித்திருக்கிறார்.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு அவருக்கு எழுதிய கடிதத்தில், அந்த அமைப்பு தோற்கடிக்கப்பட்டு விட்டதாலும், அதன் தலைவர்கள் கொல்லப்பட்டு, அந்த அமைப்பு சிதைவடைந்துள்ள நிலையில் அவர்களை தடை செய்வது தேவையற்றதும், பொருத்தமற்றதுமாகும்.
விடுதலைப் புலிகள் இருப்பார்களானால் அவர்கள் ஆவி உருவமாகவே இருப்பார்கள். இவர்கள் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பார்கள் என்பது காலங்கடந்த விடயமாகும். ஆவி ஒருநாளும் அச்சுறுத்தும் செயல்களை செய்யாது.
இந்திரா காந்தி எமக்கு ஒரு நினைவு செய்தியை தந்துள்ளார். அது என்னவெனில், 1983 இல் தமிழர் எதிரன இனக்கலவரத்தின் பின்னர் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை (TULF) சந்தித்து, இலங்கையில் வடக்கு கிழக்கில் ஒரு தமிழ்நாட்டை உருவாக்கும் ஆலோசனையை தந்தது எமது ஞாபகத்திற்கு வருகின்றது.
இதைத் தொடர்ந்து, இந்திரா காந்தி விடுதலைப் புலிகளுக்கு ஈழம் பெறுவதற்கு பலவழிகளில் உதவினார். ஆனால் விடுதலைப் புலிகளுக்கும் இந்தியாவிற்குமான நட்புறவு தொடராது விட்டதையிட்டு நாம் வருந்துகின்றோம்.
விடுதலைப் புலிகள் இலங்கை அரசியலில் இனி எப்போதுமே பிரசன்னமாக மாட்டார்கள். ஆகவே இந்தியாவும் ஈழத் தமிழ் மக்களும் ஒரு புதிய உறவை ஏற்படுத்த வேண்டும். இந்திரா காந்தி 1983இல் விரும்பிய தமிழீழ தீர்மானத்தை இப்போதுள்ள இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டுமென்று விரும்புகின்றோம்.
தமிழ்நாட்டில் எமது தமிழ் உறவுகளை நாம் நேசிப்பதுடன் அவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ஆனால் இந்தியாவிலிருந்து தமிழ்நாடு பிரிவதை நாம் விரும்பவுமில்லை அதனை ஊக்குவிக்கவும் மாட்டோம். அத்துடன் உலகத் தமிழர்கள் எவருமே இந்த செயலை விரும்பவும் மாட்டார்கள். தமிழ்நாட்டு தமிழர்கள் இந்தியப் பிரஜைகளாக நன்றாக இருக்கின்றனர். அதை எங்களுக்கு குழப்ப விருப்பமில்லை.
இலங்கையிலுள்ள தமிழர்கள் இலங்கை இராணுவத்தினரால் துரத்தப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இன அழிப்பு நடவடிக்கைக்கு உட்பட்டும் வருகின்றனர். ஆனால் இந்தியத் தமிழர்கள் இந்திய இராணுவத்தால் இப்படியான நடவடிக்கைகளுக்கு உட்படவில்லை.
இலங்கையில் நடைபெற்ற இனஅழிப்பு நடவடிக்கைகளைப் பற்றி இந்திரா காந்தி 1983இல் குறிப்பிட்டுள்ளார். ஈழம் என்பது மனித நாகரீகத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்லாது தமிழர்களுக்கு பாதுகாப்பையும் வழங்கும் என்று அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பின் பேச்சாளர், சுதந்திர தமிழீழம் இந்தியாவிற்கு பல நன்மைகளை அளிக்கும் என்று குறிப்பிட்டதுடன் அவற்றில் இரண்டை இங்கே சுட்டிக்காட்டியுள்ளார்.
1. கொழும்பு அரசாங்கம் போலல்லாது, தமிழீழம் முழுமையான ஒரு நட்புறவை இந்தியாவுடன் பேணிப் பாதுகாக்கும். இந்தியா சீனா, பாகிஸ்தானுடன் சண்டையிடும் போது கொழும்பு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானுக்கும் சீனாவிற்கும் ஆதரவை வழங்கியது.
பெரும்பாலான ஈழத் தமிழ் மக்கள் வீட்டில் மகாத்மா காந்தி, நேரு, இந்திரா காந்தியின் ஓவியங்களை வைத்திருப்பது தமிழ் மக்கள் இந்தியா மீது கொண்டுள்ள ஆழமான நேசத்தையும், அவர்களின் உறவின் தன்மையையும் பிரதிபலிக்கும் என்று குறிப்பிட்டுள்ளனர்.
தமிழீழ அரசியல், கொள்கைத் திட்டங்கள் இந்த உணர்வுகளைப் பின்பற்றும். மேலும் தமிழீழத்திற்கும் இந்தியாவிற்கும் இடையிலிருக்கும் இந்து சமுத்திரத்தை இந்தியா தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கும் ஈழம் ஆதரவளிக்கும்.
2. தமிழீழ தமிழர்கள், தமிழ்நாட்டு தமிழர்கள் போல் ஒரு இலட்சிய, மற்றும் புதுமையான வர்த்தக துறையில் ஆற்றலுள்ளவர்களாக இருப்பார்கள். அத்துடன் இந்தியாவுடன் வர்த்தக நட்புறவை பேணுபவர்களாகவும் இருப்பார்கள். இது இந்தியாவின் வளத்தை அதிகரிக்கச் செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பினர் எழுதியுள்ள கடிதத்தின் முடிவில், இந்தியா தனது முழுமையான செல்வாக்கை பாவித்து இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு பாதுகாப்பானதும், அமைதியானதுமான தனிநாட்டை பெற்றுத் தரும் என்று தாம் நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment