Saturday, July 28, 2012

தடுப்பில் உள்ள 20 புலி உறுப்பினர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக யுத்தக்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த விடுதலைப் புலிஉறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சட்ட மா அதிபர் திணைக்களம் குறித்த புலி உறுப்பினர்களுக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக குறித்த தமிழீழவிடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படக் கூடும் என சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment