Lebal

Tuesday, July 31, 2012

தங்களைத் தாங்களே ஆளும் தீர்வே தமிழருக்குத் தேவை; சம்பந்தன் திட்டவட்ட அறிவிப்பு

Sampanthanஇணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை உள்ளடக்கியதும் தங்களது சொந்த மண்ணில் தங்களைத் தாங்களே ஆளக் கூடியதுமான ஒரு நிரந்தரமான, நியாயமான, நிலைத்து நிற்கக்கூடிய அரசியல் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக உள்ளோம்.
 இவ்வாறு திட்டவட்டமாக அறிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

பிரபாகரன் உயிரோடு இருந்தபோதே கலைஞர் தமிழர்களை காக்கவில்லை பின் டெசோ எதற்கு?


இலங்கையில் தமிழர்கள் எல்லாம் இறந்த பிறகு டெசோ மாநாடா? என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சென்னையில் நேற்று 30ம் திகதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கேள்வி:- தி.மு.க. தலைவர் டெசோ மாநாடு நடத்துவது குறித்து உங்கள் கருத்து என்ன?

9 ஆவது நாளாக நடைபெற்றுக்​கொண்டிருக்​கும் சிவந்தனின் உண்ணாவிரதப் போராட்டம்


seithy.com gallery news .லண்டனில் ஒலிம்பிக் மைதானத்தின் முன் சிவந்தன் தனது கோரிக்கை நிறைவேறும் வரை உறுதி தளராமல் ஒன்பதாவது நாளாக உண்ணாநிலை போராட்டத்தை தொடர்கின்றார்.
வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த பல வேற்றின மக்களும் சிவந்தனின் போரட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவுகளை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர்.

Monday, July 30, 2012

A tale of two interventions




R. Hariharan

A quarter century on, India’s military involvement in Sri Lanka remains relevant as a lesson in poor leadership in contrast to the 1971 war to liberate East Pakistan
The India-Sri Lanka Agreement 1987, also known as the Rajiv-Jayawardene Accord, completes 25 years on July 29. As a soldier who actively participated in India’s military intervention in both Sri Lanka (1987-90) and East Pakistan in 1971 (that created Bangladesh), I cannot help comparing the two exercises in the assertion of India’s power.
The two theatres, and the environment in India at the time of the two operations, were totally different. In Bangladesh, it was conventional war against the well trained Pakistan army. India went into it after much military planning and preparation. In contrast, in Sri Lanka, the army got embroiled in counter-insurgency combat with Tamil insurgents, for which it was unprepared. Force levels in Bangladesh were much higher. The air force and navy formed part of the overall offensive plan. In Sri Lanka it was essentially a decentralised infantry operation against the Liberation Tigers of Tamil Eelam.

யாழ்.அரியாலையில் மகாத்மா காந்திசிலை விசமிகளால் உடைத்துச் சேதம்!

யாழ்.அரியாலை மகாத்மா காந்தி சனசமூக நிலையத்திற்கு முன்னால் உள்ள மகாத்மா காந்திசிலை நேற்று சனிக்கிழமை இரவு இனந்தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக யாழ்.தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் மன்னிப்புக் கோரவேண்டும் கருணாநிதி! -நெடுமாறன்


உலகத் தமிழர்களிடம் திமுக தலைவர் கருணாநிதி பகிரங்கமாக மன்னிப்புக் கேட்ட பின்புதான் டெசோ மாநாட்டை நடத்த வேண்டும் என்று, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் பேசினார்.
ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூலை வெளியிட்டு அவர் பேசியது:
இலங்கையில் நடந்த இனப் படுகொலைக்கு இலங்கை அரசும், மத்திய அரசும், மத்திய அரசுக்கு உறுதுணையாக இருந்த திமுகவும்தான் பொறுப்பேற்க

தப்பியோடிய 41,000 படைச்சிப்பாய்களை இராணுவத்திலிருந்து நீக்க முடிவு.


இராணுவத்திலிருந்து தப்பியோடிய 41 ஆயிரம் படைச் சிப்பாய்கள், தமது பதவியிலிருந்து உத்தியோகபூர்வமாக நீக்கப்பட உள்ளனர். தப்பியோடிய படைவீரர்களிடமிருந்து பணம் அறவீடு செய்யப்பட வேண்டியதனைத் தவிர வேறும் குற்றச் செயல்களில் ஈடுபடாத படைச்சிப்பாய்கள் இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட உள்ளனர்.
குறித்த படைவீரர்களுக்கான பணி நீக்கக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளன. 50 ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவு பணத்தை இராணுவத்திற்கு செலுத்த முடியாத, வேறு குற்றச்

இலங்கையின் நட்பு நாடுகள் நான்கிடம் இருந்து ஐநா உறுப்புரிமை மீளப்பெறப்பட்டன.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டு வரப்பட்ட பிரேரணையின்போது இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்திருந்த நாடுகளுள் நான்கு நாடுகள், மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.
சுழற்சி முறையில் வழங்கப்படுகின்ற இந்த உறுப்புரிமை, குறித்த நாடுகளிடம்

தடுப்பில் உள்ள 20 புலி உறுப்பினர்களுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டு

தமிழீழ விடுதலைப் புலிகளின் 20 உறுப்பினர்களுக்கு எதிராக யுத்தக்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் குறித்த சிரேஸ்ட விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராக தண்டனை விதிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட உள்ளன. கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த விடுதலைப் புலிஉறுப்பினர்கள் பாரியளவில் குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பன்நாட்டு பார்வையாளர்களின் கவனத்தையீர்த்த எதிர்ப்பு நிகழ்வுகள்! லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு மகிந்த வரவில்லை!Top News

லண்டன் ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க நாளான நேற்று ஒலிம்பிக் விளையாட்டரங்குகள் அமைந்திருக்கும் கிழக்கு லண்டன் பகுதியில் மூன்று இடங்களில் நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வுகளில் பெருமளவிலான தமிழ் மக்கள் கலந்து கொண்டனர்.
ஆரம்ப நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாட்டுத் தலைவர்கள், பிரமுகர்கள் சென்ற பாதையான Aspen Way என்ற பிரதான வீதியின் ஒருமருங்கில் மாலை 5 மணியளவில் கூடத் தொடங்கிய மக்கள் பதாகைகளையும், தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டொலிகளை எழுப்பியபடி இரவு 8.30 வரை தமது போராட்டத்தை தொடர்ந்தனர்.

யாழில் தலைவிரித்தாடும் இராணுவ அராஜகம்! நீதித்துறையிலும் எமக்கு நம்பிக்கையில்லை. - சிவாஜிலிங்கம்

இராணுவத்தினரால் தாக்குதல் நடத்தப்படலாமென பொலிஸாரே எச்சரிக்கும் அளவிற்கு யாழ்ப்பாணத்தில் இராணுவ அராஜகம் தலைவிரித்தாடுவதாக தெரிவித்துள்ள முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோ அமைப்பின் அரசியல் தலைவருமான எம்.கே.சிவாஜிலிங்கம், இதை சர்வதேசம் சரியாக புரிந்துகொள்ளவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு வெலிக்கடை சிறைச்சாலைப் படுகொலை நினைவு தினம் குறித்த சுவரொட்டிகளை நெல்லியடி பகுதியில் ஒட்டிக்கொண்டிருந்த சமயம் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும், அதன் பின்னர் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்தும் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

ஈழத் தமிழருக்கு சம உரிமை கிடைக்காவிட்டால் புதிய வடிவில் இன மோதல் வெடிக்கும்: நேர்காணலில் எரிக் சோல்ஹெய்ம் தெரிவிப்பு.

இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை வழங்காவிட்டால் மீண்டும் இன மோதல் புதிய வடிவத்தில் வெடிக்கும் என்று நார்வேயின் முன்னாள் அமைதித் தூதராக எரிக் சோல்ஹெய்ம் கூறியுள்ளார்.
நோர்வே நாட்டில் வெளிவரும் ஆஃப்டன்போஸ்டன் நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது:

Thursday, July 26, 2012

அதிர்ச்சியில் புதுடெல்லி-திருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம்




திருகோணமலை, சம்பூரில் அணுமின்நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்காவுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஆதரவுடன், சிறிலங்காவில் தலையீடுகளை அதிகரிக்கும் பாகிஸ்தானின் பாரிய திட்டத்தின் ஒரு பகுதியே இந்தத் தந்திரோபாயமாகும்.

இலங்கைத்தீவில் இனப்படுகொலை : அமெரிக்காவில் இடம்பெற்ற கருத்தாடல் களம்.Top News Top News

seithy.com gallery news இலங்கைத் தீவில் ஈழத் தமிழினத்தின் மீது நடந்தேறிய இனப்படுகொலை தொடர்பிலாக கருத்தாடல் நிகழ்வொன்று அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பொஸ்ரன் பகுதியில் இடம்பெற்றிருந்த இக்கருத்தாடல்களத்தில், தமிழகத்தில் இருந்து பேராசிரியர் மணிவண்ணன், கனடாவில் இருந்து பேராசிரியர் சேரன் உட்பட அமெரிக்காவைச் சேர்ந்த வழக்கறிஞர் Ali Beydoun , Libra Institute கற்கைநெறி மையத்தின் தலைவர் Dr.Maria Szonert உட்பட பல வளஅறிஞர்கள் பங்கெடுத்திருந்தனர்.

ஐ.நாவுக்கு ஆலோசனை சொல்கிறார் சிறிலங்காவின் புதிய தூதுவர்

ravinath-genevaசிறிலங்காவின் நிலைமைகளை மதிப்பீடு செய்யும் போது, முறையான செயல்முறைகளை ஐ.நாவும், ஐ.நாவின் உறுப்புநாடுகளும் பின்பற்ற வேண்டும் என்று சிறிலங்கா வலியுறுத்திக் கூறியுள்ளது.
ஜெனிவாவுக்கான சிறிலங்காவின புதிய வதிவிடப் பிரதிநிதியாகப் பொறுப்பேற்றுள்ள ரவிநாத் ஆரியசிங்க, தனது நியமன ஆவணத்தை ஜெனிவாவிலுள்ள ஐ.நா. பணியக பணிப்பாளர் நாயகம் காசிம்

போதைப் பொருள் பாவனை, பாலியல் துஷ்பிரயோகம் புலிகள் இயக்கம் இல்லாததால் தான் அதிகரிப்பு கல்வி வீழ்ச்சிக்கு காரணம்

jaffnacampasவிடுதலைப் புலிகள் தற்போது இல்லாத நிலையிலேயே மாணவர் போதைப் பொருள் பாவனை மற்றும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்து மாணவர் கவனம் திசை திருப்பப்பட்டதும் மாணவர் கல்வி வீழ்ச்சிக்குக் காரணம் என்று யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் அ.இராசகுமாரன் தெரிவித்தார்.
பல்கலைக்கழக ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் தொடர் பணிப் புறக்கணிப்புத் தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. அதன் போது கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு சொன்னார் இராசகுமாரன்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:

சிறைச்சாலை திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வர அரசு நடவடிக்கை

447b7304935c7afa2a4d53c97a72e6f0சிறைச்சாலைகள் திணைக்களத்தை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வருவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 
நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் நடக்கும் முறைகேடுகள், மோசடிகள், சட்டவிரோத செயல்கள், போதைப் பொருள், பாதாள உலக செயற்பாடுகள் காரணமாக சமூக ரீதியாக பாரதூரமான நிலைமை உருவாகியுள்ளது.

ஒலிம்பிக் தொடக்கவிழாவுக்கு லண்டன் வருகிறார் சிறிலங்கா அதிபர் – எதிர்ப்பு பேரணிக்கு தமிழர்களும் தயார்

MR-london-2012லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் சிறிலங்கா அதிபர் பங்கேற்கவுள்ளார்.  அவருக்கு எதிராக பாரியளவில் போராட்டம் நடத்த அங்குள்ள தமிழ் சமூகம் தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘தி இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
போர்க்குற்றம் சாட்டப்படும் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் லண்டன் வரத் திட்டமிட்டுள்ளார் என்பதை அவரது பேச்சாளர் பந்துல ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

Wednesday, July 25, 2012

தமிழர்களுக்கு நீதி கிடைப்பதற்கு சர்வதேசம் பொறுப்புடன் செயற்பட வேண்டும். - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

மிழ்மக்கள் மீது தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் அக்கிரமங்களுக்கு சர்வதேச சமூகமே பொறுப்பேற்றக வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்கள் தெரிவித்துள்ளார்.
Top News உள்ளகரீதியான விசாரணை மூலம் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது நிரூபணமான சூழலிலும், கடந்த மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள்

தமிழ்நாடு உளவுப்பிரிவின் கண்களில் மண்ணைத்தூவி விட்டு கொல்கத்தா சென்ற சிறிலங்கா படையினர்

இந்தியாவுக்குள் நுழையும் சிறிலங்காப் படையினரைக் கண்காணிக்க சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு காவல்துறையின் உளவுப்பிரிவினரும் கியூ பிரிவினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
எனினும் அவர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டே சிறிலங்கா விமானப்படையினர் நால்வர் மாற்று உடையில் சென்னை ஊடாக கொல்கத்தாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

திருகோணமலையில் பாகிஸ்தானின் அணுமின் நிலையம் – அதிர்ச்சியில் புதுடெல்லி

திருகோணமலை, சம்பூரில் அணுமின்நிலையம் ஒன்றை அமைப்பது குறித்து சிறிலங்காவுடன் பாகிஸ்தான் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளது, இந்தியாவுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்தியா ரூடே செய்தி வெளியிட்டுள்ளது.

கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம் மூலம் சவுத் புளொக்கிற்கு கிடைத்துள்ள இந்தச் செய்தி புதுடெல்லிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா வர்த்தக கண்காட்சிக்கு இந்தியாவில் இருந்து மிகப்பெரிய வர்த்தகப் பட்டாளம்

சிறிலங்காவில் அடுத்தவாரம் ஆரம்பமாகவுள்ள மிகப்பெரிய வர்த்தக கண்காட்சியில் இந்தியாவின் 100இற்கும் அதிகமான நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை அதிகரிக்கும் நோக்கில் இந்தக் கண்காட்சி நடத்தப்படவுள்ளது.

இதில் பங்கேற்க இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பிரதிநிதிகள் குழு அடுத்தவாரம் கொழும்பு வரவுள்ளது.

வடக்கில் சிங்களக் கிராமங்களில் தான் சிறிலங்காப் படையினர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர் – கோத்தாபய ராஜபக்ச

வடக்கில் சிறிலங்காப் படையினர் பெண்கள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச நிராகரித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,

Tuesday, July 24, 2012

Fasting in London against genocidal Sri Lanka timed for Black July, Olympics


The Black July remembrance event held at London on Sunday addressed the systematic injustice that Sri Lanka had been meting out to the Tamils, with activists placing emphasis on the protracted nature of genocide Eezham Tamils face in unitary Sri Lanka. Gobi Sivanthan, a Tamil youth activist, began his hunger-strike vigil which will end on the Olympics closing ceremony on August 12 demanding, among others, the immediate halting of land grabs in the Tamil homeland. Conveying solidarity with the demands of the demonstrators, Kurdish and British activists who spoke at the event urged the International Olympic Committee (IOC) to immediately suspend Sri Lanka from the 2012 London Olympics. “States committing genocide should not be part of Olympic games,” Akif Wan, a representative from the Kurdistan National Congress (KNK) said, speaking at the event. 



சட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? – விளக்கமளிக்குமாறு புலிகள் அமைப்பிற்கு அறிவித்தல்

LTTE_flagசட்டவிரோத இயக்கமாக ஏன் அறிவிக்கக்கூடாது? என்று விளக்கம் கேட்டு விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது. டில்லியில் உள்ள சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு நடுவர் மன்றப் பதிவாளர் அனில்குமார் கவுசல் இதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:-

இறைமையை மீட்பதற்கான எமது போராட்டம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்தானதில்லை!- தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள்

lttelogoஇந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையை ஈராண்டுகளுக்கு நீடிப்பது தொடர்பான அறிவித்தலை வெளிப்படுத்தும் நோக்கில் அண்மையில் வெளிவந்த அறிக்கையில், எமது அமைப்புக் குறித்தும் எமது விடுதலைப் போராட்டத்தைக் குறித்தும் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பில் எமது ஆழ்ந்த கரிசனையையும் ஆட்சேபத்தையும் தெரிவிக்க விரும்புகின்றோம்.
தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/03/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
22/07/ 2012.

புதிய ஜனாதிபதிக்கு பூங்கொத்து ஒன்றை அனுப்பி வாழ்த்தியதுடன், இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி.

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதையடுத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் தமக்கும் உள்ள நீண்டகால நட்பு தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமென்று இலங்கை ஜனாதிபதி பூங்கொத்து ஒன்றையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

படுகொலை செய்யப்பட்ட நிமலரூபனுக்கு உணர்வுபூர்வமாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் பிரித்தானியத் தமிழர் ஒன்றியம்

வவுனியாச் சிறைச்சாலைச் சம்பவத்தின் பின்னர் சிறை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டதும், அதில் அடிகாயங்களுக்கு உள்ளாகி ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட க. நிமலரூபன், ராகம வைத்தியசாலையில் மரணமான செய்தி கேட்டு தமிழினமே அதிர்ச்சியும், கொந்தளிப்பும் அடைந்தது.
மீண்டும் 1983 இல், யூலைக் கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களின் நினைவுகளும், இனவெறித்தாக்குதல் காட்சிகளும் கண்முன்னே வந்துபோனது. .

Monday, July 23, 2012

உலகத் தமிழர்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கின்ற அரசாக தமிழீழம் அமையும்: வி.உருத்திரகுமாரன்

uruththirakumar_001நாளை மலரப்போகும் தமிழீழ அரசானது, உலகத் தமிழர்களின் நலன்களுக்காக குரல்கொடுக்கப் போகின்ற அரசாக அமையும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி. உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளிவிழா நிகழ்வில் ஆற்றிய உரையின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் பங்கெடுத்து உலகத் தமிழர்களை நோக்கிய ஈழத்தமிழர்களின் நிலைப்பாட்டினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் எடுத்துரைத்தார்.
 அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆண்டு நினைவுப் போரணியுடன் சிவந்தனின் உண்ணாவிரதம் தொடங்கியது

ஜுலை படுகொலைகளின் இருபத்தொன்பதாவது ஆண்டு நினைவாக தமிழ் மக்கள் கலந்து கொண்ட பேரணி ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ள கிழக்கு லண்டன் பகுதியில் இன்று நடைபெற்றது.
மாலை 4 மணியிலிருந்து கிழக்கு லண்டன் வெஸ்ராம் பார்க் (Westham Park) இல் உள்ள திடலில் கூடிய மக்கள் மாலை 6.05 க்கு ஊர்வலமாக றொம்பேர்ட் (Romford) வீதி வழியாக ஸ்ரார்ட்பேர்ட் பிராதன வீதியிலுள்ள (Stratford High Street DLR) தொடருந்து நிலையத்துக்கு அருகாமையிலுள்ள இடத்துக்கு மாலை 6.55 மணியவில் வந்தடைந்தனர். அவ்விடத்தில் கொடியேற்றலுடன் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின..Top NewsTop News

Sunday, July 22, 2012

இலங்கை இராணுவத்திற்கு பெங்களூரில் இராணுவப் பயிற்சி! தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்... இந்திய அரசுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்... .



இலங்கை இராணுவத்திற்கு பெங்களூரில் இராணுவப் பயிற்சி!

தமிழ் அமைப்புகள் கண்டன ஆர்ப்பாட்டம்...

இந்திய அரசுக்கு இந்து அமைப்புகள் கண்டனம்... .

 

மயிலிட்டியை நிரந்தரமாக அபகரிக்கிறது சிறிலங்கா இராணுவம் – கடற்றொழிலாளர்களை கோப்பாயில் குடியேற்ற நடவடிக்கை

church-Feast-Myliddyபலாலி இராணுவத் தளத்துக்கு வடக்கேயுள்ள மயிலிட்டிப் பிரதேசத்தை உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் கொண்டு வரவுள்ள சிறிலங்கா அரசாங்கம், அங்கிருந்து இடம்பெயர்ந்த கடற்றொழிலாளர்களை கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தத் தகவலை சிறிலங்கா படைகளின் யாழ்.படைத் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.
“1990இல் இடம்பெயர்ந்த மயிலிட்டியை சேர்ந்த குடும்பங்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கும்படி சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.

கராத்தே போட்டிக்கு தமிழகம் சென்ற இலங்கையருக்கு எதிர்ப்பு! திருப்பியனுப்ப திட்டம்!!

sri-lanka-india-flag-100x70இந்தியாவில் நடைபெறும் சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டியொன்றில் பங்குபற்றச் சென்ற இலங்கையர்கள் மூவரை ஈழ ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் காரணமாக இலங்கைக்குத் திரும்பிச் செல்லுமாறு சுற்றுப்போட்டி ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர்.
கோயம்புத்தூர் பொள்ளாச்சி நகரில் இச்சுற்றுப்போட்டி நடைபெறுகிறது. மேற்படி இலங்கையர்கள் நேற்றிரவு போட்டியில் பங்குபற்றவிருந்தனர். எனினும் மேற்படி ஆர்ப்பாட்டங்கள் காரணமாக அவர்களை இலங்கைக்கு திரும்பிச் செல்லுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

ஈழத்து அகதிகளை கையாளும் அதிகாரத்தை க்யூ பிரிவிடமிருந்து பறிக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி கோரிக்கை

naam_thamilar_flag_001புழல் ஈழ அகதிகள் முகாமில் இருந்து வந்த 6 பேரை கடந்த ஜூலை 1ஆம் திகதி தமிழக காவல்துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த அதிகாரிகளும், காவலர்களும் ஒரு வண்டியில் ஏற்றி, சென்னை கடற்கரைச்சாலை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று, விசாரணை என்ற பெயரில் அவர்களை அடித்துத் துன்புறுத்தினர்.
அவர்களில் 4 பேரை அன்று நள்ளிரவே விடுவித்துவிட்டு, 2 பேரை மட்டும் நீதிபதி முன்பு நிறுத்தி 15 நாள் நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.

அரச மருந்தகக் காணியை மடக்கும் வடக்கு மாகாணசபை

hoaகைதடியில் அமைந்துள்ள அரச மருந்தகக் காணியை தன்வசமாக்க வடக்கு மாகாண சபை இரகசிய நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று பொது அமைப்புகள் விசனம் தெரிவிக்கின்றன.
குறித்த மருந்தகத்தை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கும் இந்தக் காணி முழுவதையும் அபகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது என்றும் கூறப்பட்டது. இந்த அரச மத்திய மருந்தகத்துக்கு ஐம்பது பரப்புக்கு மேற்பட்ட காணி சொந்தமாகவுள்ளது.

ஐ.நா விற்கு வாக்குமூலம் வழங்கியவரை இலங்கையிடம் கையளிக்க முயலும் அவுஸ்ரேலிய அரசு!

Dayan_Anthony2009 ஆம் ஆண்டு வன்னியில் இடம்பெற்ற போரின் இறுதியில் சிறீலங்கா இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு  கடுமையான சித்திரவதைகளை அனுபவித்து உறவினர்களின் கடும் முயற்சியால்விடுதலை செய்யப்பட்ட டயான் அந்தோனி எனப்படும் “அன்பு” தற்போது அவுஸ்திரேலியாவில் அகதி தஞ்சம் கோரியுள்ளார்.
2010 ஆம் ஆண்டு இறுதிப் பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு அகதியாகச் சென்ற இவர் தற்போது அவுஸ்ரேலியாவில் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளார்.

டெசோ மாநாடு: போன் மறுமுனையில் ரெஸ்பான்ஸ், குண்டுவீச்சு போல உள்ளது!

karunanidhi-50-years_26“இலங்கை தமிழர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது என்று முடிவு செய்தாயிற்று. ஆனால், எந்த ரூட்டில் போவது என்பதில்தான் குழப்பம். காரணம், எல்லா பாதைகளிலும் ஏதோ ஒரு தடை இருக்கிறது” தி.மு.க. தலைவரின் இன்றைய நெருக்கடி பற்றி இவ்வாறு சொன்னார் அவருக்கு நெருக்கமான பிரமுகர் ஒருவர்.
டெசோ மாநாடு தேதி நெருங்க, நெருங்க, தி.மு.க. வட்டாரங்களில் பதட்டம்தான் அதிகமாக உள்ளது.

யாழ்ப்பாணத்தில் தமிழ் மொழி இரண்டாம் மொழியாக்கப்பட்டுள்ள பரிதாபம்

யாழ். குடாநாட்டில் அண்மைக் காலமாக அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவங்களின் வருகை அதிகரித்து வருகின்றது. அதனோடு இணைந்து சிங்கள மொழியும் வருகை தந்துள்ளமை  அனைவரும் அறிந்ததே .

யாழ்.குடாநாட்டில் முக்கிய இடங்களில் இருக்கின்ற அரச நிறுவங்களின் பெயர்பலகைகளில் சிங்கள மொழியே முதன்மை மொழியாக காணப்படுகின்றமை வருத்தத்திற்குரியதே

தமிழ் நாட்டில் ஈழ இனப்படுகொலை விழிப்புணர்வு ஊர்தி பயணம்!

தனி ஈழம் கோரி இந்தியா முழுதும் ஊர்திப் பயணம் சென்னையில் இருந்து 07-07 -12 தொடங்கி தமிழ் நாடெங்கும் ஈழத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரி வாகன சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.
மைலாப்பூரில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்னர் தோழர்களை உற்சாகமாக ஊர்திப் பயணத்தை கொடி அசைத்து தொடக்கி வைத்தனர் இயக்குனர் புகழேந்தி மற்றும் இயக்குனர் களஞ்சியம் அவர்கள்.மேலும் பல இயக்கத் தோழர்களும் உணர்வாளர்களும் இந்த தொடக்க விழாவில் பங்குபெற்று ஊர்திப் பயணம் மேற்கொண்டுள்ள சீனிவாஸ் திலீபன் நாகராஜ் ஆகியவர்களை ஊக்கப்படுத்தினர்.

அகதிகளை ஏற்றிவரும் படகுகளை எரிக்கும் அவுஸ்திரேலிய கடற்படையினர்.

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ்தீவில் இருந்து 20 கடல் மைல் தூரத்தில் இலங்கை மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகளை அவுஸ்திரேலியக் கடற்படையினர் எரித்துள்ளனர்.
நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 51 இலங்கை அகதிகளைக் கொண்ட படகு ஒன்று நேற்று கிறிஸ்மஸ் தீவை அடைந்திருந்தது. மற்றொரு படகு இந்தோதோனேசியாவில் இருந்து 65 அகதிகளை ஏற்றி வந்திருந்தது. அகதிகள்

Friday, July 20, 2012

The Government of Violence : A Massacre In Dandakaranya By Kamal K.M


Countercurrents.org
`Dandakaranya' is a stretch of forest in India that runs through the states of Chattisgarh, Orissa, Maharashtra , and Andhra Pradesh. Roughly translated in Sanskrit, the word means `Jungle of Punishment'.
E:\BIJAPUR\KAMAL\Kamal\DSC_0700.JPGWhen you enter the village of Kottaguda , located in Bijapur district of Chattisgarh, the first impression is one of serenity. The vestiges of the Salwa Judum pillage from a few years ago still remain as a burnt scar. The houses have stood starkly against these acts of aggression.
We couldn't see any trace of massacre from ten days ago.

Searching For Jake Sully In India's Heartland By Harsha Walia


Countercurrents.org

Building traditional irrigation systems, practicing forest conservation and cooperative farming, and providing educational and medical facilities in the isolated rural forests of India . This could apply to any NGO or charity, but is actually the work of armed Naxalite Maoists. In addition to community development, Naxalites have organized politically to self-govern and have claimed responsibility for numerous killings of government officials, security personnel, and alleged informers. Today, many of the Naxal cadres are Adivasis(tribal indigenous) and 40% are women. Naxalites have been operating since the 1970s in 20 states around the jungles of Central and Eastern India .

ஜனநாயகப் போராட்டத்தைக் குழப்புவதற்கு புலிக் கொடி ஏந்தி வந்த படைப் புலனாய்வுப் பிரிவு - ஸ்ரீதரன்

யாழ்ப்பாணம் நெல்லியடியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போது இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த படைப் புலனாய்வுப் பிரிவினர் புலிக் கொடிகளை ஏந்திச் சென்றதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
நிமலரூபனின் கொலையைக் கண்டித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் தமிழர்களின் நில ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் நெல்லியடியில் இன்று முற்பகல் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

பிரதமர் இந்திரா காந்தி 1983 கலவரங்களுக்குப் பின்னர் ஒரு சுதந்திர தமிழீழத்தை முன்மொழிந்தார்-ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

tamil_eelam_001விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதுடன் அவர்கள் ஒரு செயலற்ற அமைப்பு ஆகிவிட்டனர் என இந்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்திற்கு, ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகளால் விரோதமான நடவடிக்கைககள் எதுவும் மேற்கொள்ளப்படும் என்று இந்தியா அஞ்சத் தேவையில்லை.