Saturday, July 21, 2012

அகதிகளை ஏற்றிவரும் படகுகளை எரிக்கும் அவுஸ்திரேலிய கடற்படையினர்.

அவுஸ்திரேலியா, கிறிஸ்மஸ்தீவில் இருந்து 20 கடல் மைல் தூரத்தில் இலங்கை மற்றும் இந்தோனேசியாவிலிருந்து அகதிகளை ஏற்றி வந்த இரண்டு படகுகளை அவுஸ்திரேலியக் கடற்படையினர் எரித்துள்ளனர்.
நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 51 இலங்கை அகதிகளைக் கொண்ட படகு ஒன்று நேற்று கிறிஸ்மஸ் தீவை அடைந்திருந்தது. மற்றொரு படகு இந்தோதோனேசியாவில் இருந்து 65 அகதிகளை ஏற்றி வந்திருந்தது. அகதிகள்
அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்ட பின்னரே, கடற்படையினரால் இப்படகுகள் தீயிட்டு அழிக்கப்பட்டன. இவை எரிந்து கொண்டிருந்த போது மற்றொரு அகதிகள் படகு இலங்கையில் இருந்து 25 அகதிகளுடன் நேற்றுக் காலை கிறிஸ்மஸ்தீவை அடைந்தது.
அகதிகளை ஏற்றிவரும் படகுகளை அவுஸ்ரேலிய கடற்படை எரிப்பது வழக்கமான நடவடிக்கையே என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment