Monday, July 16, 2012

சிதம்பரம்- கலைஞர் சந்திப்பு__டெசோ மாநாட்டை கைவிடக் கோரிக்கை


deso

திமுக தலைவர் கருணாநிதியை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென நேற்று சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பின் போது தமிழீழம் கோரி நடத்தப்படும் டெசோ மாநாட்டைக் கைவிடுமாறு கருணாநிதியை ப.சிதம்பரம் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.

சென்னை சிஐடி காலனியில் உள்ள கருணாநிதியின் வீட்டில் கருணாநிதியை சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் நீடித்தது.



இசசந்திப்பில் 2 விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

குடியரசுத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட உள்ளதால் ஆ.ராசா, தயாநிதி மாறனுக்குப் பதிலாக திமுகவைச் சேர்ந்த யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது

தமிழீழம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ள நிலையில் தமிழீழம் கோரி திமுக நடத்தும் டெசோ மாநாட்டை கைவிடுமாறு வலியுறுத்தியதாகவும் அப்படி நடத்தியே தீருவது என்றால் வலிமையாக குரல் கொடுக்காமல் மென்மையாக வெளிப்படுத்துமாறு சிதம்பரம் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

ஆனால் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரமோ, குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாகவும் பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடர்பாகவும் "விரிவாக" கருணாநிதியிடம் பேசியதாக கூறியுள்ளார்.

டெசோ மாநாடு நடைபெறுமா?

ப.சிதம்பரத்தின் இந்த திடீர் சந்திப்பால் திமுக நடத்த திட்டமிட்டுள்ள டெசோ மாநாடு நடைபெறுமா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் டெசோ மாநாட்டை நடத்துவதன் மூலமே ஈழப் பிரச்சனையில் திமுக மீதான அதிருப்தியை குறைத்துக் கொள்ள முடியும் என்றும் வைகோ மீண்டும் திமுக அணியில் சேர்க்க ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளவும் திமுக தலைவர்கள் நினைக்கின்றனர்.

இதனால் எப்படியாவது டெசோ மாநாட்டை நடத்திவிட்டு அதில் ரொம்ப பெரிதாக ஆவேசமாக எவரும் பேசாமல் பார்த்துக் கொள்வது என்ற நிலைப்பாட்டை திமுக மேற்கொள்ளக் கூடும்.

உள்துறை அமைச்சகத்தின் கடும் நெருக்கடியைத் தொடர்ந்து தமிழீழத்துக்கான டெசோ மாநாட்டை தமிழக அரசு தடை செய்தால் அதையும் அரசியலாக்கலாம் என்பதும் திமுகவின் நிலைப்பாடு

No comments:

Post a Comment