Monday, July 09, 2012

சிறிலங்கா படையினரை திருப்பி அனுப்பினால் இந்தியாவுக்கு ஆபத்தாம் – கர்நாடக அமைச்சர் சொல்கிறார்


சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிப்பதை தடுப்பதால் இந்தியாவுக்கே ஆபத்து என்று கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா தெரிவித்துள்ளார். தாம்பரத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்கு பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழ்நாட்டில் எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்து, சிறிலங்கா விமானப்படையினர் ஒன்பது பேரும் பெங்களூரில் உள்ள ஜலஹங்கா விமானப்படைத் தளத்தில் பயிற்சி பெறுவதற்காக அனுப்பப்பட்டுள்ளனர்.



இந்தநிலையில் இந்தியாவின் எந்தப் பகுதியிலும், சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிக்கக் கூடாது என தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அசோகா,
“தமிழ்நாடு எங்களின் சகோதர மாநிலம். சிறிலங்காவில், ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டது வேதனையளிக்கிறது.
சிறிலங்கா படையினருக்கு இந்தியாவில் பயிற்சி அளிக்கவில்லை என்றால், அவர்கள் சீனா போன்ற பிற நாடுகளில் பயிற்சி பெறுவர்; இது இந்தியாவுக்கு, பாதகமானதாக மாறிவிடும்.
சிறிலங்கா படையினருக்குப் பயிற்சி அளிப்பது தேசிய பிரச்சினை.
பெங்களூரில் சிறிலங்கா படையினருக்கான பயிற்சி குறித்து, கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவுடன் கலந்தாலோசனை செய்தபின், முடிவு செய்யப்படும்.“ என்று தெரிவித்துள்ளார்.
இவ் விடயம் 08. 07. 2012, (திங்கள்), தமிழீழ நேரம் 7:49க்கு பதிவு 

No comments:

Post a Comment