Tuesday, July 10, 2012

முதற் கடற்கரும்புலிகள் நினைவு நாள்

kantharoopan110.07.1990 அன்று வல்வெட்டித்துறைக் கடலில் காவியமான முதற் கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோரின் 22ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் நின்றவாறு கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் எடித்தாரா கட்டளைக் கப்பல் மீது 10.07.1990 அன்று கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகியோர் வெடிமருந்து நிரப்பப்பட்ட தமது படகினை மோதி வெடிக்க வைத்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதியதொரு வரலாற்றைப் படைத்தனர்.

இக்கடற்கரும்புலி மாவீரர்கள் தொடங்கி வைத்த வழியினில் தமிழீழக் கடற்பரப்பிலும், அதற்கு அப்பாலும் சிறிலங்கா கடற்படையின் பல கடற்கலங்களை மூழ்கடித்தும், ஆயிரக்கணக்கான சிறிலங்கா படையினரை அழித்தும் 200 வரையான கடற்கரும்புலிகள் தமிழீழ விடுதலைப் போருக்கு வலுச்சேர்ந்து  தம்மை ஆகுதியாக்கிக் கொண்டனர்.
தமிழீழ விடுதலைக்காய் தம்மை வெடியாக்கி வரலாறாகிய கடற்கரும்புலிகள் மேஜர் காந்தரூபன், கப்டன் கொலின்ஸ், கப்டன் வினோத் ஆகிய மாவீரர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்

No comments:

Post a Comment