Tuesday, July 24, 2012

புதிய ஜனாதிபதிக்கு பூங்கொத்து ஒன்றை அனுப்பி வாழ்த்தியதுடன், இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார் இலங்கை ஜனாதிபதி.

பிரணாப் முகர்ஜி இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ளதையடுத்து இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவரை விஜயம் செய்யுமாறும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிலையில் இந்திய புதிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் தமக்கும் உள்ள நீண்டகால நட்பு தொடர்ந்தும் நீடிக்கவேண்டுமென்று இலங்கை ஜனாதிபதி பூங்கொத்து ஒன்றையும் அவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

அத்துடன் முகர்ஜி ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்யும் நாளில் உத்தியோகபூர்வமான வாழ்த்து செய்தி அனுப்பிவைக்கப்படுவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் அழைப்பு விடுக்கப்படும் ௭ன்றும் ஜனாதிபதி அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி நாளை தமது கடமையைப் பொறுப்பேற்கவுள்ளார். இதனையடுத்து ராஜ்டிரபவனில் உள்ள அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் அவருக்கு மரியாதை செலுத்துமுகமாக இராணுவ அணிவகுப்பு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment