Thursday, July 05, 2012

Post titlசிரியா விவகாரத்தில் கரிசனை காட்டும் ஐ.நா ஏன் இலங்கை விவகாரத்தில் மௌனம் சாதிக்கிறது: - கரன் பார்கரின் கோபம் - e

Top Newsஅரபுலகினை மையப்படுத்திய சர்வதேச அரசியல் மட்டத்தில், சிரியா விவகாரம் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ள நிலையில், சிரியா விவகாரத்தில் ஐ.நா கொண்டிருக்கும் கரிசனை ஏன் இலங்கை விவகாரத்தில் கொண்டிருக்கவில்லை என சர்வதேச சட்டவாளரான கரன் பார்கர் அம்மையார் அவர்கள் தனது கோபத்தினை வெளிப்படுதியுள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபையின் 20 ஆவது கூட்டத் தொடரில் தொடச்சியாக பங்கெடுத்து வரும் கரன் பார்கர், சிரிய நெருக்கடி குறித்தான சிறப்பு விவாத்தின் கலந்து கொண்ட போதே இக்கூற்றினைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 21 ஆண்டு போர்க்காலத்தில் ஐ.நா கொண்டிருந்த மௌனம், லட்சக்கணக்கான தமிழர்களின் உயிர்களை காவுகொள்ள வைத்திருந்ததென தெரிவித்துள்ள அவர், ஐ.நாவின் இந்த நீடித்த மௌனம் எத்தகைய விளைவுகளை அங்கு ஏற்படுத்தியது என்பது பற்றி இடித்துரைத்தார்.
அவர் உரையில் தெரிவித்ததாவது,

சிரியாவின் நிலைமைகளில் செலுத்தப்பட்டிருக்கும் ஐ.நாவின் கவனத்தையும், விசாரணை ஆணைகுழு ஆற்றிய சேவைகளையும் வரவேற்றுக் கொள்கின்றோம். இவ்வேளை, இலங்கையில் நடைபெற்ற ஆயுதப்போராட்டம், கவலையளிக்கத்தக்க வழியில், இத்தகையதொரு (ஐ.நாவின்) தீர்க்கமான நடவடிக்கைகளுக்கு கொடுத்து வைக்கவில்லை.
1987 ஆம் ஆண்டில் இருந்து 2009 ஆம் ஆண்டு, போர் ஓயும்வரை, மனித உரிமை ஆணைக்குழுவிலிருந்தோ அல்லது பேரவையிலிருந்தோ, 21 ஆண்டு போர் நெருக்கடி குறித்தோ, உயிர்கள் காவு கொள்ளப்படுவது குறித்தோ ஒரு சிறிய தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை என்பதை நாம் கவனித்திருக்கிறோம்.
60 க்கு மேற்பட்ட மனித நேயப் பணியாளர்கள் கொலைகளுக்கு மௌனம்! ரோமின் சட்டத் தொகுதியில் ஒரு மூலகமாக கணிப்பிடத்தக்க செயலான தமிழரின் பகுதிகளுக்கு உணவு, மருந்து, தண்ணீர் போன்றவற்றிற்கு இருந்த தடை உத்தரவுகள் மீதான மௌனம் !
அந்த பகுதிகள் அரச கட்டுப்பாடுகளின் கீழிருந்தும், 2004 ஆம் ஆண்டில் சுணாமியால் பாதிக்கப்பட்ட தமிழ் பகுதிகளுக்கு முதலுதவியாளர்கள் செல்வது, சிறிலங்கா அதிகாரிகாளால் மறுக்கப்பட்டமைக்கும், அதிகாரிகளால் கோபி அனானையும் இளைப்பாறிய அமெரிக்க அதிபரையும் (பில்கிளிண்டனையும்) அனுமதிக்க மறுத்தமைக்கும், மௌனம்!
இந்த மௌனமானது, போரின் இறுதி 50,000 தமிழர்கள் கொல்லப்படத்தக்கதாக சிறிலங்கா அரசாங்கத்தின் முழுமூச்சான தாக்குதலை தமிழர் மீது கொண்டு நடத்தவும், வெள்ளைக் கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப் புலிப்போராளிகள், கைக்கெட்டும் தூரங்களில் வைத்து சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கும், சிறிலங்கா அரசாங்கத்தை ஊக்குவித்ததாகும்.
இதனையே, ஐ.நா பொதுச்செயலரினது நிபுணர்குழு 'தமிழர் மீதான அடக்குமுறையின் வெற்றித்திமிர்' என அழைத்தார்கள். இறுதியாக 19 ஆம் ஐ.நா கூட்ட தொடரில், சிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளின் நடைமுறைப்படுத்தல்களின் முன்னேற்றங்களை பெறுமதியிட மட்டும் பேரவை செயல்பட்டது.
எதுவாயினும், பேரவையின் இந்த நடவடிக்கைகள், மனிதாபிமான சட்டங்களின் வெளிச்சத்தை வைத்து, சிரியாவில் பயன்படுத்தப்பட்ட தராதரங்கள் போன்றதொரு சர்வதேச நடவடிக்கைக்கு பிரதியீடாக இருந்துவிடலாகாது என கரன் பார்கர் அம்மையார் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment