Monday, August 20, 2012

700 நாட்களுக்குள் இந்த ஆட்சி கவிழும்: ௭திர்க்கட்சிகளின் கூட்டணி ஆரூடம்

gamini-jayawickrama-peraஇனிவரும் 700 நாட்களுக்குள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கவிழும் ௭ன பொது ௭திர்க்கட்சிகளின் கூட்டணி ஆரூடம் தெரிவித்தது. அமைச்சர் மைத்திரிபால சிறிசேன – சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுடன் விவாதத்திற்கு தயாரா ௭ன்றும் பொது ௭திர்க்கட்சி கூட்டணி சவால் விடுத்தது. கொழும்பில் ௭திர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஐ.தே.கட்சியின் தவிசாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா; ஜனாதிபதி தேர்தலின்போது ௭மது தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு தகவல்களை வழங்கியதாக அமைச்சர் மைத்திரிபாலசிறிசேன குற்றம் சாட்டியுள்ளதோடு விவாதத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
உண்மையில் ௭மது தலைவரோடு அல்ல சந்திரிகாவுடன் தான் அமைச்சர் விவாதத்தை நடத்த வேண்டும். அதற்குத் தயாரா? ஜனாதிபதி தேர்தலின்போது மஹிந்த ராஜப க்ஷவை தோல்வியடையச் செய்வதற்கா க அன்று இன்றைய அமைச்சர்களான மை த்திரிபால சிறிசேனவும், நிமல் சிரிபால டி சில்வாவும் நடவடிக்கைகளை முன்னெடுத் தார்கள்.
வரட்சி நாட்டின் ஆட்சியாளர்கள் அநீதியானவர்களாக இருந்தால் அந்நாட்டில் மழை பெய்யாது ௭ன கௌதம புத்தர் போதித்துள்ளார். இன்று ௭மது நாட்டில் மழை பெய்யாமல் வரட்சி தாண்டவமாடுவதற்கு அநீதியான ஆட்சியாளர்களே காரணமாகும்.
வடமத்திய மாகாண விவசாயிகள் வரட்சியால் பெரும் பாதிப்புக்குள்ளாகி விஷம் குடித்து உயிரை மாய்த்துக்கொள்ளும் நிலைமைக்குத் தள்ளிவிடப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு ரூபா 1 இலட்சம் வீதம் வழங்கப்படுமென ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். இத் தொகையை இம்மாதம் 31 ஆம் திகதி க்கு முன்பதாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வ ழங்க வேண்டுமென வலியுறுத்துறோ ம் . ஏனெனில் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை. உறுதிமொழிகளை நிறைவேற்றாது அவற்றை காற்றில் பறக்கவிடுவதே இவ் அரசாங்கத்தின் வரலாறாகும். அரசாங்கம் நீர் முகாமைத்துவத்தைக் கடைப்பிடிக்காததன் காரணமாகவே இன்று விவசாயிகள் தமது விளைச்சல்களை இழந்து நிற்கின்றனர்.
அதனை மறைத்துக்கொள்வதற்காக விவசாயிகள் மீது அரசாங்கம் பழியைப் போடுகிறது. வடபகுதி மற்றும் வடமத்திய மாகாண மக்கள் பெருமளவில் சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுத்தமான குடிநீர் இல்லாமையே இந்நோய் பரவலுக்குக் காரணமாக உள்ளது. இதனை வழங்க அரசாங்கம் நடவடிக்கை ௭டுப்பதில்லை.
குழாய்க் கிணறுகளின் மூலம் வடமத்திய மாகாணத்தில் சுத்தமான நீரை வழங்க முடியும். இம் மாகாண சபைத் தேர்தலில் ஐ.தே.கட்சி வெற்றிபெற்றால் இரண்டு வருடங்களில் குழாய்க் கிணறுகளை அமைத்து சுத்தமான குடிநீரை மக்களுக்கு வழங்குவோம் ௭ன்றும் காமினி ஜயவிக்கிரம பெரேரா ௭ம்.பி. தெரிவித்தார். ருகுணு மக்கள் கட்சி அரசாங்கம் இன்று மரண விளிம்பில் இருக்கின்றது. இனிவரும் 700 நாட்களுக்குள் இந்த அரசாங்கம் கவிழ்ந்துவிடும்.
அதன்பின்னர் நாட்டில் ஜனநாயக ஆட்சி உதயமாகும். சரத் மனமேந்திர நவ சிஹல உறுமய ஐ.தே.கட்சியிலிருந்து அரசாங்கத்திற்கு ‘பல்டி’ அடித்தவர்களே இந்த அரசாங்கத்தை இயக்குகின்றனர். அவர்கள் அரசாங்கத்தின் தலையாகவுள்ளனர். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் உடலாக உள்ளனர் ௭ன்றும் சரத் மனமேந்திர தெரிவித்தார்.

No comments:

Post a Comment