இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக சென்னையில் தி.மு.க சார்பில் நடத்தப்பட்ட
டெசோ மாநாடு பற்றி பாரதீய ஜனதா தலைவர் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.
டெசோ மாநாட்டில் திமுக நிறைவேற்றிய தீர்மானங்கள் குறித்து பேசிய வெங்கையா
நாயுடு, 'போரினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு ஆதரவுக் கரம்
நீட்டவேண்டும் என பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் பாரதீய ஜனதா
கட்சி குரல் கொடுத்தது. ஆனால் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும்
எடுக்கவில்லை� என்றார்.மேலும் - 'மத்திய அரசில் அங்கம் வகித்தபோதும், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான எங்கள் கோரிக்கைகளை ஆதரித்து தி.மு.க மத்திய அரசை நிர்பந்திக்கவில்லை. இது துரதிருஷ்டவசமானது. இலங்கைப் பிரச்சினைக்கு அரசியல் ரீதியாகத் தீர்வு காணவேண்டும் என்று இலங்கைக்கு அரச மட்டத்தில் மத்திய அரசு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று கடந்த மூன்று ஆண்டுகளாக தி.மு.க எக்கோரிக்கையும் விடுக்கவில்லை.
ஆனால் இப்போது ஐ.நா. சபையின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு அரசியல் ரீதியில் தீர்வு காணவேண்டும் என்று கூறுவது காலம் கடந்து எடுத்த நடவடிக்கையாகவே உள்ளது' எனவும் வெங்கையா நாயுடு விமர்சித்துள்ளார்.
No comments:
Post a Comment