வடக்கு
ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசங்கள் அல்ல என்பதை
அந்நிய சக்திகளுக்கு மீண்டுமொரு தடவை தெளிவாகச் சொல்லிவைக்க
விரும்புகின்றோம் என எச்சரிக்கை விடுத்துள்ள தேசிய அமைப்புகளின் ஒன்றியம், நாட்டின் இறையாண்மையைக் கூறுபோடுவதற்கு இடமளியோம் என்றும் சூளுரைத்துள்ளது.
எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் அரசு, நாட்டுக்குப் பொருந்தாததை
ஒருபோதும் செய்யக்கூடாது என்று தேசிய அமைப் புகளின் ஒன்றியத்தின் தலைவர்
கலாநிதி குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:
“டெசோ’ என்ற பிரிவினைவாத அமைப்பால் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்தான
தீர்மானங்களை ஐ.நாவுக்கு அனுப்பிவைப்பதற்கு தி.மு.க. தீர்மானித்துள்ளது என
அறியமுடிகின்றது.
இலங்கையை ஆள்வது ஐ.நாவோ அல்லது அமெரிக்காவோ அல்ல என்பதை கருணாநிதி போன்ற அரசியல் பச்சோந்திகள் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
எமது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடும் அந்நிய சக்திகளுக்கு வடக்கு
ஒபாமாவுக்கும், கிழக்கு சோனியாவுக்கும் உரித்தான பிரதேசம் அல்ல என்பதைத்
தெளிவாகக் கூறிவைக்க விரும்புகின்றோம் என்றார்.
No comments:
Post a Comment