சிறிலங்காவில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவியை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக இந்தியா வீடமைப்புத் திட்டம் உள்ளிட்ட பல உதவிகளை அறிவித்திருந்தது.
இந்த உதவி நிதியை சிறிலங்கா அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அண்மையில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்ட சுஸ்மா சுவராஜ் தலைமையிலான இந்திய நாடாளுமன்றக் குழு இதனை நேரடியாகவே பார்த்து உறுதி செய்துள்ளது.
இந்தநிலையில் தமிழர்களுக்கு நேரடியாகவே நிதி உதவிகளை வழங்குவது குறித்து இந்தியா ஆலோசித்து வருவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வி.சித்தன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சென்ற குழுவில் இடம்பெற்றிருந்த அவர் இது தொடர்பாக தகவல் வெளியிடுகையில்,
“தமிழர்களுக்காக இந்திய மத்திய அரசு வழங்கிய நிதியை, சிறிலங்கா அரசு சரியான முறையில் பயன்படுத்தவில்லை என்பது, அங்கு சுற்றுப் பயணம் செய்தபோது தெரியவந்தது.
இதனால், பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் பெயரிலேயே வங்கிக்கணக்கு தொடங்கி, நிதி உதவி வழங்க மத்தியஅரசு ஆலோசித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment