“டெசோ”
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 14 தீர்மானங்களையும் ஐ.நா. சபை, ஜெனிவா மனித
உரிமைகளின் ஆணைக்குழு, சர்வதேச நீதிமன்றம் உள்ளிட்ட உலக நாடுகள், சமூக
அமைப்புகள் ஆகியவற்றுக்கு தி.மு.க. சார்பில் அனுப்பிவைக் கப்பட்டுள் ளன
என்று தி.மு.க. வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
கடந்த 12ஆம் திகதி சென்னையில் “டெசோ” மாநாடு நடந்தது. அந்த மாநாட்டின்
ஆய்வரங்கில் 30 இற்கும் மேற்பட்ட வெளி நாட்டுப் பிரதிநிதிகள், உலக
நாடுகளின் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள், வடமாநில அரசியல் கட்சித்
தலைவர்கள் சிலர் பங்கேற்றனர்.
ஆய்வரங்கில் விவாதிக்கப்பட்ட சில வரை வுத் தீர்மானங்கள் மீது
எதிர்ப்புகள் எழுந்தன. முடிவில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன. இந்
தத் தீர்மானங்களை ஜெனிவாவில் உள்ள மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அனுப்பிவைக்க
வேண்டுமென மாநாட்டில் பேசிய சிலர் வலியுறுத்தினர்.
அதன் அடிப்படையில் 14 தீர்மானங்களும் சர்வதேச நாடுகளின் கவனத்துக்கு
எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. சபை, லன்டனிலுள்ள
சர்வதேச பொதுமன்னிப்பு வழங்கும் அமைப்பு, ஜெனிவாவில் உள்ள சர்வதேச மனித
உரிமை ஆணைக்குழு, நெதர்லாந்திலுள்ள சர்வதேச நீதிமன்ற ஆணைக்குழு உள்ளிட்ட
உலக நாடுகளின் சமூக அமைப்புகளுக்கு தி.மு.க., சார்பில் தீர்மானங்கள்
அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இலங்கைத் தமிழர்கள் பிரச்சினையில் மத்திய அரசின் செயற்பாட்டை
விரைவுபடுத்தும் பணிகளையும் முடுக்கி விடுவதற்கான திட்டங்களையும் விரைவில்
தி.மு.க. ஆரம்பிக்கவுள்ளதென அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
source: sankathinews on August 17th, 2012
No comments:
Post a Comment