Wednesday, August 22, 2012

ஐ.நா மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை நாடாளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்: ரணில்

ranil_wicramasinga_003ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை நாடாளுமன்றிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் பேரவையின் அகில கால மீளாய்வு அமர்வுகளுக்காக இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் மற்றும் மனித உரிமை மேம்பாட்டுக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை தொடர்பில் நாட்டின் நாடாளுமன்றம் தெரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆளும் கட்சியினர் இந்த அறிக்கையை நாடாளுமன்றில் சமர்ப்பித்து விவாதம் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.
இந்த அறிக்கை பற்றி அறிந்து கொள்ளும் உரிமை நாட்டுக்கு மக்களுக்கு இருக்கின்றது.
இதேவேளை, இந்த அறிக்கை தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இன்று நாடாளுமன்ற அமர்வுகளில் விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment