பருத்தித்துறைக்
கடற்பரப்பில் கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்ட
சமரில் காவியமான நான்கு கடற்கரும்புலிகள் உட்பட்ட 10 மாவீரர்களினதும்,
மணலாறு மற்றும் எழுதுமாட்டுவாள் பகுதிகளில் காவியமான ஐந்து மாவீரர்களினதும்
11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.16.09.2001 அன்று திருகோணமலைத் துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையின் கப்பல் தொடரணி மீது பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கடற்படையின் இரு டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டதுடன் மேலும் இரு டோறா பீரங்கிப் படகுகள் கடுமையாகச் சேதப்படுத்தப்பட்டன.
இக்கடற்சமரின்போது நான்கு கடற்கரும்புலிகள் உட்பட 10 கடற்புலிகள் வீரச்சாவைத் தழுவினர்.
அவர்களின் விபரம் வருமாறு:
கடற்கரும்புலி லெப்.கேணல் அனோசன் (மாதவன்)
(சிதம்பரப்பிள்ளை சிவகுமார் – ஒதியமலை, வவுனியா)
கடற்கரும்புலி மேஜர் அருணா (சுதா)
(குலசிங்கம் தவச்செல்வி – மட்டுவில், யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி மேஜர் நித்தியா
(செல்வராசா தயாளினி – தம்பசிட்டி, யாழ்ப்பாணம்)
கடற்கரும்புலி மேஜர் காந்தி (வேங்கை)
(செபமேயு ஜெறின் – விடத்தல் தீவு, மன்னார்)
கடற்புலிகளின் துணைத்தளபதி
கடற்புலி லெப்.கேணல் இரும்பொறை
(சிவராஜா கலைச்செல்வன் – தம்பலகாமம், திருகோணமலை)
கடற்புலி லெப்.கேணல் குமுதன்
(தவராசாதுரை நாகேஸ்வரன் – உடுத்துறை, யாழ்ப்பாணம்)
கடற்புலி மேஜர் சிவகாந்தன் (காந்)
(சந்தனகுணவடிவேல் ரவீந்திரகுமார் – கம்பர்மலை, யாழ்ப்பாணம்)
கடற்புலி மேஜர் நளன்
(செல்வராஜா செல்வக்குமார் – சுதுமலை, யாழ்ப்பாணம்)
கடற்புலி கப்டன் எழிலரசன்
(நாகமணி மணிவண்னன் – சிறுப்பிட்டி, யாழ்ப்பாணம்)
கடற்புலி லெப்டினன்ட் திருவாணன்
(றோமுவாட் தேவானந்தன் – முருங்கன், மன்னார்)
இம் மாவீரர்களினதும் இதே நாள்
யாழ். எழுதுமட்டுவாள் பகுதியில் எதிர்பாராதவிதமாக கைக்குண்டு வெடித்தபோது வீரச்சாவைத் தழுவிய
கப்டன் மதியன்
(சிவலிங்கம் இராமலிங்கம் – முத்தையன்கட்டு, முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் உதயன் (பூவழகன்)
(சுப்பிரமணியம் சுரேஸ்குமார் – தருமபுரம், கிளிநொச்சி)
மணலாற்றில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிய
துணைப்படை வீரர் லெப்டினன்ட் ஞானசேகரம்
(சோமு ஞானசேகரம் – ஆனையிறவு, கிளிநொச்சி)
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் தமிழ்செல்வன்
(இராசு தமிழ்செல்வன் – உரும்பிராய், யாழ்ப்பாணம்)
மணலாற்றுப் பகுதியில் வேவு நடவடிக்கையின்போது வீரச்சாவைத் தழுவிய
துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் பாலகிருஸ்ணன்
(இராமையா பாலகிருஸ்ணன் – கோணாவில், கிளிநொச்சி)
ஆகிய மாவீரர்களினதும் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

surce:செய்திகள் by tamil24
No comments:
Post a Comment