Thursday, September 27, 2012

இன்னமும் 320 விடுதலைப் புலிகளே விடுதலை செய்யப்படுவர் – சிறிலங்கா இராணுவப் பேச்சாளர்

Tamil Political Prisonersஇன்னமும் 320 விடுதலைப் புலிகள் இயக்க மன்னாள் போராளிகளே விடுவிக்கப்படுவர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார்.
“போரின் முடிவில் 12,000 விடுதலைப் புலிகள் சரணடைந்தனர். இவர்களில் 11,500 முன்னாள் போராளிகள், பல்வேறு கட்டங்களாக பனர்வாழவு அளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
தற்போது 500 பேர் மட்டுமே தடுப்புக்காவலில் உள்ளனர்.  இவர்களில் 320 பேருக்கு நீண்டகாலப் புனர்வாழ்வுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
அது முடிந்ததும் அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவர். ஆனால் எஞ்சியுள்ள 180 பேர் விடுவிக்கப்படமாட்டார்கள்.

அவர்கள் பாரதூரமான சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment