தமிழ்நாடு,
கெலவரப்பள்ளி இலங்கை தமிழர் அகதி முகாமில், ஆறு பேர் மாயமாகினர். இதில்,
இருவரை மைசூர் மற்றும் இந்தோனேஷியாவில் மீட்டுள்ளதாகவும், மற்றவர்கள்
குறித்த விபரம் தெரியவில்லை என தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.ஓசூர் கெலவரப்பள்ளி முகாமில், ஒரு வாரத்துக்கு முன், முகாமை சேர்ந்த தம்பியா, 19, இன்பன், 35, நவநீதன், 25, ராஜேந்திரன், 36, அமுதன், 38, உள்ளிட்ட, ஆறு பேர் மாயமாகினர்.
தகவல் அறிந்த கியூ பிரிவு பொலிஸார், அவர்களை தேடி வந்தனர். நவநீதனை கியூ பிரிவு பொலிஸார், கர்நாடகா மாநிலம் மைசூரில் மீட்டனர். இந்தோனேஷியாவில் அமுதனை மீட்டனர்.
மற்றவர்கள் குறித்த விபரம் தெரியவில்லை எனவும் அவர்கள் குறித்து விசாரணைகள் இடம்பெற்ற வருவதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தின் பல முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்கள், அவுஸ்திரேலியா செல்லும் ஆர்வத்தில் அரசு அனுமதி பெறாமல் முகாம்களை விட்டு மாயமாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment