Sunday, September 30, 2012

மெனிக் பாம் நிலத்தைக் கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் கடும் போட்டி

camp - vanniபோரின் பின்னர் இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வவுனியா மெனிக்பாம் கடந்த வாரத்தில் முழுமையாக மூடப்பட்டது. இந்தநிலையில் அங்குள்ள காணிகளை பெற்றுக்கொள்வதில், வர்த்தகர்களும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும், இராணுவத்தினரும் ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
தமது சொந்த இடங்களை தவிர வேறு இடங்களில் குடியமர மறுத்துவந்த முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மக்களே இந்த முகாமில் இறுதியாக தங்கியிருந்தனர்.
எனினும் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு அவர்கள் மெனிக்பாமில் இருந்து வெளியேற்றப்பட்டு முல்லைத்தீவின் அடர்ந்த காட்டுப்பகுதியில் விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் அங்குள்ள காணிகளை பெற்றுக்கொள்வதில், வர்த்தகர்களும்,வெளிநாட்டு முதலீட்டாளர்களும் இராணுவத்தினரும் ஆர்வம் காட்டுவதாக அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
செட்டிக்குளம் மெனிக்பாம் பிரதேசம் 6000 ஏக்கர் பரப்பளவைக்கொண்டது.
இதில் 200 ஏக்கர் பரப்பை தமது பண்ணை பாடசாலைக்காக தருமாறு இராணுவத்;தின் கோரியுள்ளனர்.
புவிசரியதவியல் திணைக்களமும் 40 ஏக்கர் பரப்பை கோரியுள்ளது.
இதேவேளை மெனிக்பாம் பகுதியில்; பரம்பரையாக வாழ்ந்து வந்த 40 குடும்பங்கள் அங்கு திரும்பவேண்டியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment