Monday, September 10, 2012

சிங்கள இராணுவத்திற்கு பயிற்சி! தமிழர்களை கேவலப்படுத்தும் அநியாய முயற்சி!- டி. இராஜேந்தர்

rajendrarமத்திய அரசு சிங்கள இராணுவத்திற்கு, தமிழ்நாட்டிலே கொடுத்து கொண்டிருப்பது இராணுவப் பயிற்சி. இது மத்திய அரசு தமிழர்களை கேவலப்படுத்துவதற்கான, அதிகபட்ச அநியாய முயற்சி என்று கண்டித்துள்ளார் இலட்சிய திமுக தலைவர் விஜய டி.ராஜேந்தர்.
இதுதொடர்பாக இலட்சிய திமுக தலைவர் விஜய டி. ராஜேந்தர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் தமிழர்களை கொன்று குவித்த
இலங்கை அதிபர் ராஜபக்சவின் கைகளில் படிந்தது, இரத்தக்கறை.
அதை தமிழர்களால் மறக்க முடியவில்லை, இன்று வரை.

இந்த நிலையில் இரத்தக்கறை படிந்த ராஜபக்சவிற்கு,
இரத்தின கம்பளம் விரித்து ஆரத்தி எடுத்து, ஆரத்தழுவி மகிழ மத்திய அரசு நீட்டுகிறது இருகை.
அதனால்தான் ராஜபக்ச மீண்டும் புரிகிறாரோ இந்தியாவுக்கு வருகை.

மத்திய அரசு சிங்கள இராணுவத்திற்கு, தமிழ்நாட்டிலே கொடுத்து கொண்டிருப்பது இராணுவப் பயிற்சி.
இது மத்திய அரசு தமிழர்களை கேவலப்படுத்துவதற்கான, அதிகபட்ச அநியாய முயற்சி.

மத்திய அரசின் இந்த போக்கை வன்மையாக கண்டிக்க நினைக்கிறது, எங்கள் இலட்சிய திமுக இயக்கம்.
அதன் அடிப்படையில் தான் எங்களுடன் கண்டன ஆர்ப்பாட்ட முழக்கம்
வருகின்ற 12ம் தேதி புதன்கிழமை அன்று காலை 11 மணியளவில், சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு நடைபெறும் என்று தனக்கேயுரிய பாணியில் தெரிவித்துள்ளார் இராஜேந்தர்.

No comments:

Post a Comment