Saturday, October 20, 2012

யாழ், கே.கே.எஸ் பகுதியில் 131 பேர் பொலிஸாரினால் கைது

imageபாரிய குற்றங்களைத் தடுக்கும் வகையில் யாழ்ப்பாணப் பொலிஸாரும் காங்கேசன்துறைப் பொலிஸாரும் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 131 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கும் நீதிமன்றில் தொடுக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
யாழ்.பொலிஸ் தலைமையத்தில் இன்று நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  பிரதிப் பொலிஸ் மா அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பிரதேசத்தில் கடந்த 12ஆம் திகதியில் இருந்து 18 ஆம் திகதி வரையில் பாரிய குற்றங்களைத் தடுக்கும் வகையில் பொலிஸார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 131 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி இரண்டு பிரிவிலும் நீதிமன்றத்தினால் அழைக்கப்பட்டு தவணைகளுக்குச் செல்லாது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 42 பேர்  கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.
அத்துடன் அனுமதியின்றி போதைப் பொருட்களை விற்றவர்கள் 12 பேர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
லோகியத்தை தன்வசம் வைத்திருந்தார் என்று கூறி ஒருவரும், சட்டவிரோதமாக மணல் ஏற்றினர் என்ற குற்றத்திற்காக 3 பேரும், குடிபோதையில் வாகனத்தைச் செலுத்தினர் என்ற குற்றத்திற்காக 15 பேரையும் கைது செய்து வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சூழலை மாசுபடுத்தினர் என்ற குற்றத்திற்காக 37 பேரும், அனுமதியின்றி ஆடு ஏற்றிச் சென்ற குற்றத்தில் 2 பேரும்,  மாடுகளை இறைச்சிக்காக கொண்டு சென்றனர் என்ற குற்றத்திற்காக ஒருவருக்க எதிராகவும் வழக்கு தொடுக்கப்பட்டு 20ஆயிரம் ரூபாவும் தண்டமாக அறவிடப்பட்டுள்ளது.
இதேவேளை குடித்து விட்டு குழப்பம் விளைவித்தனர் என 14 பேரும் பொது இடங்களில் மதுபானம் அருந்தியதற்காக 4 பேரும் கைது செய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இத்துடன் யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் 15 பாரிய குற்றங்கள் தொடர்பில் பொதுக்களினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ்ப்பாணப் பிரிவில் 11 முறைப்பாடுகளும் காங்கேசன்துறைப் பொலிஸ் பிரிவில் 4 முறைப்பாடுகளும் கிடைக்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பட்ட முறைப்பாடுகளில் களவு தொடர்பில் 12 முறைப்பாடுகளும், சங்கிலி அறுத்துச் சென்றமை தொடர்பில் 2 முறைப்பாடுகளும், பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் ஒர முறைப்பாடும் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment