Thursday, October 25, 2012

அரசின் முடிவல்ல ’13 ‘ ஐ அகற்றுவது; புதுடில்லியிடம் இலங்கை நேரில் விளக்கும்

koththa13 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை அகற்றுவது தொடர்பாக வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்கள் அரசின் உத்தியோகபூர்வ கொள்கை அல்லவென இந்தியாவிடம் இலங்கை தெரிவிக்குமென உயர் மட்ட அரச வட்டாரங்கள் நேற்றுத் தெரிவித்தன.
இன்று இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொள்ளும் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, இந்திய உயர்மட்டத் தரப்பினருக்கு அரசின் இந்த நிலைப் பாட்டை விளக்குவாரெனத் தெரிவிக்கப்படுகிறது.
13 ஆவது அரசமைப்புத் திருத் தத்தை ரத்துச்செய்யுமாறு அரசின் சில பங்காளிக் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் சூழ்நிலையில் அது தொடர்பில் கருத்து வெளி யிட்டிருந்த பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 13 ஆவது திருத்தம் இப்போதைய காலகட் டத்துக்கு உசிதமானதல்லவெனத் தெரிவித்திருந்தார்.
இந்தக் கருத்தையடுத்து 13 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக பல்வேறு தரப்பிலும் குரல் எழுப்பப் பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது இந் தியாவுக்கான பயணத்தை ஆரம்பித்துள்ள பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ 13 ஆவது திருத்தத்தின் நீக்கம் தொடர்பில் இலங்கை அரசு இறுதியான முடிவு எதனையும் எடுக்கவில்லையென இந்தியாவிடம் திட்டவட்டமாகத் தெரிவிப்பாரென மேற்படி அரச வட்டாரங்கள் மேலும் குறிப்பிட்டன.

No comments:

Post a Comment