இந்தியாவிற்கு
எதிராக குற்றங்கள் இழைக்கவில்லை என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள்
சர்வதேசப்பொறுப்பாளரும், ஆயுதக்கொள்வனவுப் பொறுப்பாளருமான கே.பி எனப்படும்
குமரன் பத்மநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.
எனது விடயம் பற்றி இந்தியாதான் தீர்மானிக்க வேண்டும். நான் எந்தவிதமான
குற்றச் செயல்களிலும் ஈடுபடவில்லை. எதிர்கால சந்ததியினரின் எதிர்காலம்
கேள்விக்குறியாக மாறியுள்ளது. அவர்களை நல்வழிப்படுத்தி அவர்களுக்கு கல்வி
உதவிகளை வழங்க வேண்டும்.
மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவதே எனது முதன்மை நோக்கம். அரசியலில் ஈடுபடுவதோ, வட மாகாண முதலமைச்சர் பதவியை பெற்றுக் கொள்வதோ பற்றி இதுவரையில் யோசிக்கவில்லை. அதனை காலமும் மக்களும் தீர்மானிக்கட்டும்.
மாணவனாக இருந்த காலம் முதல் மக்களுக்கு பணியாற்றி வருகின்றேன். தற்போதும் அதனையே செய்கின்றேன். போர் இடம்பெற்ற காலத்தில் வேறு வழியின்றி ஆயுதப் போராட்டத்தை நடத்த நேரிட்டது.
அந்தக் காலச் சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் நியாயமாகவே காணப்பட்டது. அந்தப் போரில் நாம் தோற்றுவிட்டோம், கால மாற்றங்களுக்கு ஏற்ப எம்மை நாம் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும்.
13ம் திருத்தச் சட்டம் தேவையா இல்லையா என்பதனை தமிழ் மக்களே தீர்மானிக்க வேண்டும். அதனை பற்றி நான் ஒன்றும் சொல்வதற்கில்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் 13ம் திருத்தச் சட்டத்தை செத்த பிணமாக அறிவித்திருந்தது. தற்போது அதனை தேவை என வலியுறுத்துகின்றது. இதனால் தமிழ் மக்கள் குழப்பமடைந்துள்ளனர்.
மக்களின் கருத்துக்களை அறிந்து 13ம் திருத்தச் சட்டம் பற்றி தீர்மானிக்க வேண்டும். திவிநெகும சட்டத்தில் நல்ல விடயங்களும் இருக்கின்றன. தீமைகளும் இருக்கின்றன.
புலம்பெயர் தமிழ் மக்களில் சிலர் மாயையுடன் வாழ்ந்து வருகின்றனர். நீண்ட காலத்தில் மக்களை ஏமாற்ற முடியாது.
போரால் பாதிக்கப்பட்ட அநாதரவற்ற, வசதி குறைந்த 300 சிறுவர் சிறுமியருக்கு மாதாந்தம் 750 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலம்பெயர் சமூகத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு கிழக்கு புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு கழக நிதி திட்டம் இந்த உதவியை வழங்குகின்றது.
கிளிநொச்சி, மன்னார் போன்ற பிரதேசங்களிலும் இதேவிதமான திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட உள்ளது என குமரன் பத்மநாதன் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment