Wednesday, October 24, 2012

லண்டனில் நடைபெற்ற முதற் பெண் மாவீரர் 2ம் லெப்.மாலதியின் 25ம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு!


முதலாவது பெண் மாவீரர் 2ம் லெப்ரினன் மாலதியின் 25 ஆம் ஆண்டு நினைவுவணக்க நிகழ்வு பிரித்தானியாவில் நேற்று நடைபெற்றது.
தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் ஏற்பாட்டில் லண்டனில் உள்ள 145 Orange Hill Road, Edgware, HA8 0TR எனும் முகவரியில் அமைந்துள்ள Watling Community Centre மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை 6:30 க்கு ஆரம்பமான இந்த நிகழ்வினை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் திருமதி. ஜெயா அவர்கள் தலைமைதாங்கி நடாத்தினார்.

இந்த நிகழ்வில் பொதுச்சுடரினை தேசிய செயற்பாட்டாளரான திருமதி. ஸ்கந்ததேவா அவர்கள் ஏற்றிவைத்ததைத் தொடர்ந்து இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப் போரில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களுக்காகவும், மக்களுக்காகவும், ஆசிய ஐரோப்பிய நாடுகளில் வேள்வித்தீ ஆகிய தியாகிகளுக்காகவும் அகவணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து முதற் பெண் மாவீரரான 2ம் லெப்.மாலதி அவர்களின் திருவுருவப்படத்திற்கான ஈகச்சுடரினை திருமதி. சுரேசினி அவர்கள் ஏற்றிவைக்க மலர்மாலையினை செல்வி. கார்த்திகா அணிவித்தார். மலர்வணக்கத்தினை திருமதி அகிலன் அவர்கள் ஆரம்பித்துவைக்க மக்கள் தமது மலர்வணக்கத்தினை செலுத்தினர்.
நிகழ்வில் திரு.சுதாகரன் அவர்கள் 2ம் லெப்.மாலதி தொடர்பான நினைவுரையினை வழங்கினார். தமிழீழ பெண்களின் எளிச்சி தொடர்பாக திரு.சங்கீதன் அவர்கள் உரையாற்றினார். தொடர்ந்து தாயகத்து களச்சூழல் மாற்றமும், புலம்பெயர் தமிழரின் புதிய வியூகங்களும் எனும் தலைப்பில் திரு.கோபித் அவர்கள் உரையாற்றினார்.
இறுதியில் உறுதியேற்போடு நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுபெற்றது.

No comments:

Post a Comment