Wednesday, October 17, 2012

யுத்தகாலத்தில் புலிகளின் பகுதியில் சட்டலைட் போனுடன் அலைந்த நபர்கள் !



புலிகளோடு இலங்கை அரசு சமாதானம் மேற்கொண்ட காலகட்டத்தில் இருந்தே, பல உளவாளிகள் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிக்குள் சென்றுவிட்டனர். பல சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களில் வேலைபார்க்கும் நபர்களே, இவ்வாறு சென்று புலிகளின் நடமாட்டத்தைக் கண்காணித்து இலங்கை அரசுக்கு தெரிவித்துவந்தனர். இச் செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் தற்போது சில செய்திகள் கசித்துள்ளது. இலங்கையில் சமாதானம் நிலவியவேளை நோர்வே நாட்டைச் சார்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று, வன்னியில் பணி புரிய அனுமதிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவத்தில் உள்ள சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளிகளிடம் இருந்து, இலங்கை அரசுக்கு நாளாந்தம் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என, அந் நிறுவனத்தின் பணியாளர் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளார்.


நோர்வேயை சேர்ந்த கெயார் அமைப்பின் அரசியல் ஆலோசகராக நில்ஸ் மோர்ஸ் பணியாற்றியுள்ளார். இந்த நிலையில், அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திற்கு நோர்வே தூதுவர் அனுப்பிய சில ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளது. குறிப்பிட்ட ரகசிய ஆவணம் ஒன்றின் மூலம் இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வன்னி இராணுவ நடவடிக்கையின் போது, செயற்பட்டு வந்த மேற்படி நபர்களுக்கு செய்மதி தொலைபேசிகள் வழங்கப்பட்டிருந்தன. இவ்வாறு தகவல் சேகரிக்க பங்களிப்பை வழங்கமறுத்த நோர்வே அமைப்பின் அதிகாரி ஒருவர் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டார் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

source: athirvu 

No comments:

Post a Comment