Tuesday, October 16, 2012

அணு நுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் பாரிய அபிவிருத்திகள்

n1210163இரண்டு வருடங்களுக்குள் முன்னெடுக்க திட்டம்; அணுக் கசிவினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க இந்தியா, இலங்கை கூட்டு செயற்பாடு எதிர்வரும் இரு வருட காலத்தில் மருத்துவம், விவசாயம், தொழில்நுட்பம், கைத்தொழில் அடங்கலான பல்வேறு துறைகளின் மேம்பாட்டுக்கான அணு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பாரிய அபிவிருத்தியை அடைய முடியும் எனவும் இதற்கு இந்தியா உதவ இணங்கியுள்ளதாகவும் மின் சக்தி எரிசக்தி அமைச்சர் சம்பிக ரணவக்க தெரிவித்தார்.
கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் ஆகிய இடங்களில் அமைக்கப் பட்டுள்ள அணுஉலைகளினால் ஏதும் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் இணைந்து செயற்பட இலங்கையும் இந்தியாவும் கவனம் செலுத்தியுள்ளதாக கூறிய அவர் இலங்கையில் நடைபெற உள்ள அடுத்த பேச்சுவார்த்தைக்கு முன்னர் இது தொடர்பில் வரைபொன்றை தயாரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவிலுள்ள அணு உலைகள் தொடர்பில் புதுடில்லியில் நடைபெற்ற இலங்கை, இந்திய அணுசக்தி அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடைபெற்றது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று மின்சக்தி எரிசக்தி அமைச்சில் நடைபெற்றது. இங்கு அணு சக்தி அதிகார சபைத் தலைவர் ரஞ்சித் விஜேவர்தன உட்பட அணு சக்தி அதிகாரசபை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அமைச்சர் மேலும் கூறியதாவது :-
உலகில் மின் உற்பத்தி தவிர பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு அணுசக்தி தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. இலங்கை மிகவும் பின்தங்கிய நிலையிலே உள்ளது. 6 ஆயிரம் மெகாவோர்ட் மின் உற்பத்தி செய்யும் ஆசியாவின் மிகப் பெரிய அணு உலையான கூடங்குளம் கல்பிட்டியில் இருந்து 225 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கல்பாக்கம் அணு உலை 300 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
இவற்றிலிருந்து ஏதும் அணுக் கசிவுகள் ஏற்படும் பட்சத்தில் அதனால் இலங்கைக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்கும் பொறுப்பு எமக்குள்ளது. சர்வதேச அணுசக்தி உடன் பாடுகளில் இலங்கையும் இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன.
எனவே அணு கசிவு ஏற்படும் பட்சத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு எமக்குள்ளது.
எனவே இது தொடர்பாக இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை கைச் சாத்திட நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது மக்களின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவது எமது பொறுப்பாகும்.
அணுக் கசிவு ஏற்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க எத்தகைய நடவடிக்கை எடுப்பது என்பது தொடர்பில் இரு நாடுகளும் ஆராய்ந்தன.
இலங்கையில் அணு தொழில் நுட்பத்தை மேம்படுத்து வதற்கு உதவ இந்தியா இணங்கியுள்ளது. இது தவிர எமக்கு அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் உதவ முன்வந்துள்ளன. எந்த நாட்டிட மிருந்தும் அணு தொழில்நுட்ப உதவியை பெற நாம் தயார்.
ஒரு கட்டடத்தில் உள்ள கசிவு மற்றும் விரிசல் குறித்து அணு தொழில் நுட்பத்தை கொண்டு கண்டு பிடிக்கும் நிலையம் களனியில் அமைக்கப்பட்டு வருகிறது. பயன்பாடு நீர் மற்றும் அணைக்கட்டுகளில் உள்ள கசிவு என்பவற்றை கண்டுபிடிக்கும் நிலையம் சமநலவெவயில் நிர்மாணிக்கப் பட்டு வருகிறது. இது தவிர கொன்னொரு வயில் விவசாய ஆய்வு நிலையம் நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்துள்ளதோடு தொல்பொருட்களின் வயதை அறியும் தொழில்நுட்பத்தை இங்கு அறிமுகப்படுத்த வும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விவசாயம், கைத்தொழில், தொழில் நுட்பம் ஆகிய துறைகளுக்கும் அணு தொழில்நுட்பத்தை விஸ்தரிக்க திட்ட மிட்டுள்ளோம். இதற்காக அணுசக்தி அதிகார சபையின் சட்டத்தை திருத்த முடிவு செய்ய உள்ளோம். இதன்படி அணு சக்தி குறித்து கவனிக்க தனியான ஆணைக் குழுவொன்றை நியமிக்க உள்ளதோடு அணுத் தொழில்நுட்பம் குறித்த விடயத்தை பல்கலைக்கழக பாடத்திட்டத் திலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள் ளோம்.
இந்தியாவிலுள்ள அணு உலைகளில் இருந்து ஏதும் கசிவு ஏற்பட்டால் அது குறித்து முன்கூட்டி அறிய முன்னெச்சரிக்கை கோபுரங்கள் அமைக்கப்பட்டு அதனூடாக கண்காணித்து வருகிறோம். இந்தியா எமக்கு உதவினாலும் இல்லாவிட்டாலும் எமது மக்களை பாதுகாக்க நாம் நட வடிக்கை எடுப்போம். 2015 ஆம் ஆண் டாகும் போது ஏனைய நாடுகளுடன் போட்டியிடும் அளவு எமது அணு தொழில் நுட்பம் வளர்ச்சி அடைந்திருக்கும்.

No comments:

Post a Comment