Thursday, October 18, 2012

இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றச்சாட்டு கூண்டில் நிறுத்த ஒபாமாவுக்கு வாக்களிப்போம்: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு

imageஇலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றச்சாட்டு கூண்டில் நிறுத்துவதற்கு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள், பராக் ஒபாமாவுக்கே வாக்களிக்க வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள தமது உறுப்பினர்களுக்கு இடையிலான கடிதப் பரிமாறலில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது
ஜனாதிபதி ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழேயே ஈழத்தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதன் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக ஒபாமாவின் நிர்வாகம் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்மூலம், ஈழத்தமிழர்கள் சுயமரியாதையுடனும் கௌரவத்துடன் வாழும் சூழலை ஏற்படுத்த ஒபாமாவின் நிர்வாகம் செயற்படும் என்று நம்பிக்கை உருவாகியுள்ளது.
எனவே மீண்டும் ஒபாமாவுக்கு வாக்களித்து அவரை அமெரிக்க ஜனாதிபதியாக்க அமெரிக்க வாழ் தமிழர்கள் முன்வர வேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கோரியுள்ளது.

No comments:

Post a Comment