Wednesday, October 10, 2012

பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலி: பி.பி.சீ ஊடகவியலாளர்

frances_harrisan_bbc_001பொஸ்னியா, சிரியா ஆகிய நாடுகளில் இடம்பெற்ற உயிரிழப்புக்களை விடவும் இலங்கைப் போரில் அதிகளவானோர் பலியாகியுள்ளதாக பி.பி.சீ ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்கும் போரின் போது துரதிஸ்டவசமாக சிவிலியன்களும் கொல்லப்பட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகள் உரிய நேரத்தில் சரணடைவது குறித்து அறிவிக்க தவறியதனால் அதிகளவான சிவிலியன் உயிர்கள் காவு கொள்ளப்பட்டது.
சிவிலியன்கள் உயிரிழப்புக்களுக்கு இராணுவத்தினரும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொறுப்பு சொல்ல வேண்டும். போர்க் குற்றச் செயல்களை தடுப்பது தொடர்பில் இந்தியா அக்கறையுடன் செயற்பட்டாதா என்பது சந்தேகமே.
அப்பாவி சிவிலியன்கள் கொலை செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அரசியல்
தீர்வுத் திட்டம் பற்றி இந்திய அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். தற்போது, சிறுபான்மை தமிழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இந்திய கூடுதல் அழுத்தம் பிரயோகிக்கும் என எதிர்பார்க்கின்றேன். முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற சமரானது இந்த நூற்றாண்டில் இடம்பெற்ற மிக மோசமான சம்பவமாக கருதுகின்றேன்.
போர்க் குற்றச் செயல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே எனது கருத்தாகும். இறுதிக் கட்ட போரின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய சரியான புள்ளி விபரத் தரவுகளில் முரண்பாடு நீடித்து வருகின்றது என ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹரிசன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment