Saturday, October 20, 2012

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு

imagesநாகப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு  வந்த இலங்கை கடற்படையினர், நாகை மீனவர்களின் படகுகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
இதனால் மீனவர்கள் பீதியடைந்து படகுகளை திருப்பினர். இருப்பினும் படகுகளை சுற்றி வளைத்த இலங்கை கடற்படை வீரர்கள், மீனவர்களை அடித்து சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவர்களின் வலைகளையும் அறுத்து கடலில் வீசியுள்ளனர்.

இதையடுத்து பாதியிலேயே கரை திரும்பிய மீனவர்கள், இலங்கை கடற்படை தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்துவதாக குற்றம் சாட்டினர்

No comments:

Post a Comment