Tuesday, October 09, 2012

அரச ஆதரவுடன் இயங்கும் குழுவே மஞ்சுள மீது தாக்குதல் நடத்தியுள்ளது: பொன்சேகா

SF60(5)நீதிச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மஞ்சுள திலகரத்ன மீது அரசாங்கத்தின் ஆதரவுடன் இயங்கும் ஒரு குழுவே தாக்குதல் நடத்தியுள்ளது என முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்தார்.
நேற்று திங்கட்கிழமை உயர்நீதிமன்றத் தொகுதி வளாகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நீதித்துறையே நீதி கேட்கும் நிலைமை உருவாகியுள்ளது. அரசியல்வாதி என்ற வகையில் நீதித்துறைக்கு நீதி கிடைப்பதை நாம் ஆதரிப்போம். இநடத தாக்குதலை மேற்கொள்ள அரச அனுசரணை இருந்துள்ளது என நாம் நம்புகின்றோம்.
எமக்கு கிடைத்த தகவலின்படி குற்றச்செயல்களுக்கு பேயர்போன அமைச்சர்களும் அடியாட்களும் இத்தாக்குதலை நடத்துவதில்
பங்குகொண்டனர் என நாம் அறிகின்றோம் என்று பொன்சேகா கூறினார்.
இத்தாக்குதலை நடத்தியவர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்கும்படி பொலிஸுக்கு கட்டளையிடப்பட்டதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இது ஒருபோதும் நடக்கப்போவதில்லை. ஏனெனில், இந்த சம்பவத்தின் பின் உள்ளவர்களே அவர்கள்தான் என்று அவர் குறிப்பிட்டார்.
உயர் பாதுகாப்பு வலயம் ஒன்றில் இவ்வாறான தாக்குதல் நடத்துவதற்கு அரசாங்கத்தின் அனுசரணை அவசியம். இந்த சவாலை நீதித்துறை துணிச்சலுடன் எதிர்கொள்ளும் என நான் நம்புகின்றேன் என சரத் பொன்சேகா மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment