Monday, October 01, 2012

தமிழ் புலம்பெயர் மக்கள் உண்மையில் குருடர்கள்: மஹிந்த சமரசிங்க

makintha_samarasinka_003நாட்டில் எவ்வளவு சாதக மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனை சில தரப்பினர் ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை. தமிழ் புலம்பெயர் மக்கள் உண்மையில் குருடர்கள் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமூகத்திற்கு நாட்டின் உண்மை நிலைமையை விளக்க வேண்டும்.
வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டு அரசாங்கத்திற்கு எதிரான இணையத்தளங்களின் மூலம் தகவல்களைப் பெற்றுக் கொண்டோரின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்க முடியாது.

மக்களின் உண்மை நிலைமையை அறிந்து கொள்ள நேரடியாக விஜயம் செய்ய முடியும் என்பதே சர்வதேச சமூகத்திற்கு நாம் வழங்கும் செய்தியாகும். கடந்த மாகாணசபைத் தேர்தல் முடிவுகளின் மூலம் மக்கள் தங்களது விருப்பத்தை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளனர்.
சிறு சிறு சம்பவங்கள், அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இலங்கையில் தேர்தல் நடந்ததே கிடையாது. எனினும், அவை தேர்தல் முடிவுகளை பாதித்தனவா என்பதனையே கவனத்திற்கொள்ள வேண்டும்.
மனித உரிமைப் பேரவையில் மேற்குலக நாடுகளுக்குச் சார்பானவர்களே அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர்.
இதனால் பக்கச்சார்பான தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக் கூடிய அபாயம் காணப்படுகின்றது என சிங்களப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment