Tuesday, October 30, 2012

மூன்று உயிர்களை காப்பாற்றிய ஆசனப்பட்டி

seat-belt-1வாகனத்தின் ஆசனப்பட்டியை அணிந்து கொண்டு பயணித்தமையினால் மூன்று உயிர்கள் காப்பாற்றப்பட்ட சம்பவமொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
இங்கிலாந்தில் முன்னர் வசித்துவந்த இளம் குடும்பத்தினர் தங்களுடைய கைக்குழந்தையுடன் காரில் பயணித்துள்ளனர். கார் வெனிவெல்கொல எனுமிடத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் காருக்கு பலத்தசேதம் ஏற்பட்டதுடன் தந்தைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. எனினும் காரில் பயணித்த கைக்குழந்தைக்கோ தாய்க்கோ எவ்விதமான காயங்களும் ஏற்படவில்லை.
வாகனம் பலத்த சேதத்திற்கு உள்ளாகிய போதிலும் மூவரும் ஆசனப்பட்டிகளை அணிந்திருந்தமையினால் அவர்களுக்கு எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment