Monday, October 15, 2012

காலனித்துவவாதிகளினால் எடுத்துச்செல்லப்பட்ட கலாசார சொத்துக்களை மீட்க நடவடிக்கை

images(674)காலனித்துவ காலகட்டத்தின்போது நாட்டுக்கு வெளியே எடுத்துச்செல்லப்பட்ட பலதரப்பட்ட கலாசார சொத்துக்களை மீட்டெடுப்பதற்கு இலங்கை யுனெஸ்கோவின் உதவியை நாடவுள்ளது என்று கலாசார அமைச்சர் டாக்டர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார்.
இலங்கையின் கலாசார சொத்துக்கள் வைக்கப்பட்டிருக்கும் நாடுகளின் அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, இதற்காக யுனெஸ்கோவின் உதவியை நாடும் முன்முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.
காலனித்துவ காலகட்டத்தில் பிரித்தானியா, ஒல்லாந்தர் மற்றும் போர்த்துக்கேய காலனித்துவவாதிகளினால் பெரும் எண்ணிக்கையான கலாசார சொத்துக்கள் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன.

தற்போது அவற்றில் சில லண்டன், லிஸ்பன் மற்றும் ஹேக் போன்ற நூதனசாலைகளில் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

No comments:

Post a Comment