Thursday, October 18, 2012

ஏமாற்றிவிட்டது அரசு!

4ec26e31815512a2c0ab04624a64017bஇந்திய அரசின் அழுத்தத்தின் பேரில் புதுடில்லிக்கு வரவும் இல்லை, இலங்கை அரசின் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் பங்கெடுக்குமாறு இந்தியா எமக்கு அழுத்தம் கொடுக்கவும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் ஜவகர் லால் நேரு பல்கலைக்கழ கத்தில் கடந்த சனிக்கிழமை நடந்த கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:
இலங்கை அரசு எம்முடன் பேசி சில இணக்கப்பாடுகளை எட்டிய பின்னர், தெரிவுக்குழுவுக்குப் போகலாம் என்று நாம் கூறினோம். ஆனால் அரசு அதற்கு உடன்படவில்லை.
தெரிவுக்குழுவின் மீது எமக்கு நம்பிக்கையில்லை. அதன்மூலம் எதுவும் கிடைக்கப் போவதில்லை. தமிழர்களுக்குச் சுயாட்சி வழங்குவது குறித்து இலங்கை அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதை எம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

அரசு பொலிஸ் அதி காரங்களை வழங்குவதற்கு மறுக்கிறது. மாகாண அரசுகளிடம் உள்ள நிதி அதிகாரங்களை மீளப் பெற்று வருகிறது.
இலங்கை அரசினால் ஏமாற்றப்பட்டு விட்டதாக நாங்கள் உணர்கிறோம். அவர்கள் சொல்வது ஒன்று செய்வது இன்னொன்று. என்றார்.

No comments:

Post a Comment