Saturday, October 13, 2012

அமெரிக்க முழு தொலைத்தொடர்பாடல் வலையமைப்பு சீனாவின் கைக்குள்?

USA-Chinaசீனாவின் தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் மிகப்பெரிய நிறுவனங்களான Huawei Technologies Co. மற்றும் ZTE Corp. ஆகிய நிறுவனங்கள் அந்நாட்டின் உளவுச் சேவைக்கு உதவிபுரியும் வகையில் செயற்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறித்த இரண்டு நிறுவனங்களும் அமெரிக்க தொலைத்தொடர்பாடல் வலையமைப்புகளை சீனா உளவு பார்க்க வழியமைத்துக் கொடுப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக தற்போது அறிக்கையொன்று தற்போது வெளியாகியுள்ளது.
ZTE நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கானது சீன அரசிற்கு சொந்தமானதாகும்.
Huawei நிறுவனமானது உலகின் இரண்டாவது மிகப்பெரிய தொலைபேசி மற்றும் அது சார்ந்த மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனமாகும். சீன நிறுவனம் என்ற போதிலும் இதன் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருப்பது அமெரிக்காவாகும்.
இந்நிலையில் Huawei நிறுவனமானது சீன கம்யூனிச கட்சியுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இரண்டு நிறுவனங்களினதும் தயாரிப்புகளே அமெரிக்காவின் வங்கிகள் முதல் கப்பல் போக்குவரத்துத் துறை வரை அதிகமான நிறுவனங்கள் ,அமைப்புகளின் தொடர்பாடல் துறையில் பயன்படுத்தப்படுகின்றது.
எனவே இதன்மூலமாக சீன உளவுப் பிரிவானது அமெரிக்க நிறுவனங்களை இலகுவாக உளவு பார்ப்பதுடன், இரகசியத்தகவல்களை திருடுவதற்கும் வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதுமட்டுமன்றி என்றாவது ஒரு நாள் முழு அமெரிக்காவின் தொடர்பாடல் துறையையும் சீனாவால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து நாச காரியங்களை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விரு நிறுவனங்களும் இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு ஒழுங்காக ஒத்துழைக்கவில்லையெனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சீன தயாரிப்புகளை உபயோகிப்பதனை அமெரிக்கா குறைக்க வேண்டுமெனவும் அவ்வறிக்கையில் வலுயுறுத்தப்பட்டுள்ளது.
சீனாவானது தனது இணைய வலையமைப்புகளுள் அடிக்கடி ஊடுரூவுவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டி வருகின்ற நிலையில் இவ் அறிக்கையும் வெளியாகியுள்ளது.
இவ் அறிக்கையை இங்கு காணலாம்.
Investigative Report on the U.S. National Security
Issues Posed by Chinese Telecommunications
Companies Huawei and ZTE

No comments:

Post a Comment