Sunday, October 14, 2012

இலங்கைக்கு எதிராக இன்னுமொரு பிரேரணை: தடுக்கும் முயற்சியில் அரசாங்கம்

flag_usa007இலங்கைக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள மேலும் ஒரு பிரேரணையை தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் தனிக்குழு அமைத்து, சுயமாகவும், சுதந்திரமாகவும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்திய பிரேரணை ஒன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளது.
ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மிச்சேல் கிரிமினால் இந்த பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
ஏற்கனவே இந்த பிரேரணை கடந்த 2011ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட போதும், அதன் மீதான வாக்கெடுப்பு இடம்பெறவில்லை.

இந்த நிலையில் எதிர்வரும் ஜனவரிக்குள் இந்த பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, நிறைவேற்றிக் கொள்ள அதன் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் பிரதிதிகள் இந்த பிரேரணையை சமர்ப்பிக்காதிருக்கும் பொருட்டு, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்காவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ஜாலிய விக்ரமசூரிய தலைமையில் உயர் மட்ட குழு ஒன்று இது தொடர்பில் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை இந்த பிரேரணையை தயாரித்த நாடாளுமன்ற உறுப்பினர் மிச்சேல் கிரிம் மீது போலியான குற்றச்சாட்டுகளை முன்வைக்கவும், இலங்கை அரசாங்கம் தயாராகி வருவதாக வெளியுறவுகள் துறை அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment