Monday, November 26, 2012

தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 58 ஆவது பிறந்ததினமாகும்; சோதனைகள் தீவிரம்

images 2இன்று தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 58 ஆவது பிறந்ததினமாகும். இதனை முன்னிட்டும் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள மாவீரர் நாளை முன்னிட்டும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் படையினரின் சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக யாழ்ப்பாணம், கோண்டாவில் பகுதியில் மாவீரர் தினத்தை முன்னிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதையடுத்து அங்கு படையினரின் பிரசன்னம் அதிகரித்துள்ளது. அத்துடன் வீதியில் பயணிப்போரும் சோதனையிடப்பட்டனர்.
யாழ். பல்கலைகக்கழத்திலும் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்துக்கு வாழ்த்திக் கூறியும், மாவீரர்களை நினைவு கூர்ந்து நேற்று “தமிழீழ இளையோர் அமைப்பு’ என்ற பெயரில்சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

No comments:

Post a Comment