Saturday, November 24, 2012

தருஸ்மன் அறிக்கை போன்றே பெட்றி அறிக்கையும் ஆதாரமற்றது-வெளிவிவகார அமைச்சு கண்டனம்

un_reportநிவ்யோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தர தூதராலயம் ஊடாக ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துக்கு நான் இவ்வறிக்கை வெளியானது குறித்து கவலையை வெளியிட்டுள்ளேன். தருஷ்மன் அறிக்கைக்கு பின்னர் பெட்றி அறிக்கை இன்று சர்ச்சை கிளப்பியுள்ளது.
தருஷ்மன் அறிக்கை போல் பெட்றி அறிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாத முறையில் அதன் கண்டுபிடிப்புக்களை வெளியிட்டிருப்பது கண்டனத்திற்குரிய செயலாகும்.
பெட்றி அறிக்கை தருஷ்மன் அறிக்கையின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களையும் முறைப் பாடுகளையும் அங்கீகரிக்கக் கூடிய வகையில் அமைந்திருப்பதனால் நாம் மெளனமாக இருப்பதை வைத்துக்கொண்டு அதிலுள்ள போலிக் குற்றச்சாட்டுக்களை நான் ஏற்றுக்கொண்டதாக நினைக்க லாகாது.

பயங்கரவாத யுத்தத்தில் பொதுமக்கள் கடைசி நாட்களில் கொல்லப்பட்டது குறித்து தருஷ்மன் அறிக்கையில் இறந்தவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது குறித்து நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம்.
இவ்வறிக்கையில் எல்.ரி.ரி.ஈ பொது மக்களை யுத்தக் கேடயங்களாக வைத்து அவர்களை உயிரிழக்கச் செய்தது குறித்தும் தப்பியோடியவர்களை எல்.ரி.ரி.ஈ. சுட்டுக்கொன்றது குறித்தும் எவ்வித தகவலும் குறிப்பிடப்படவில்லை. எனவே இவ்வறிக்கை ஒருதலை ப்பட்டசமாக இலங்கைக்கு எதிராக தயாரிக்கப்பட்ட அறிக்கை என்பதை குறிப்பிடுகிறோம்.

No comments:

Post a Comment