பிறிட்டோரியாவில்
தென்னாபிரிக்காவுக்கான துணைத் தூதுவராக பெயர் குறிக்கப்பட்டுள்ள, மேஜர்
ஜெனரல் சவீந்திர சில்வாவின் நியமனத்தை தென்னாபிரிக்க அரசாங்கம் இன்னமும்
உறுதிப்படுத்தவில்லை என்று தென்னாபிரிக்காவுக்கான சிறிலங்கா தூதுவர் சேகான்
ரத்னவேல் தெரிவித்துள்ளார். ஆனால் இது 100 வீதம் உறுதியாகவில்லை. தென்னாபிரிக்க அரசாங்கம் இன்னமும் அவரை அங்கீகரிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
அதேவேளை, மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா
போர்க்குற்றம்சாட்டப்பட்டுள்ள போதிலும், அவரை தென்னாபிரிக்கா துணைத் தூதுவராக ஏற்றுக் கொள்ளக் கூடும் என்று தென்னாபிரிக்க அரசஅதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே, இராஜதந்திரி ஒருவரின் நியமனம் நிராகரிக்கப்படும் என்றும் சவீந்திர சில்வா மீதான எந்தவொரு போர்க்குற்றச்சாட்டுக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை என்றும் தென்னாபிரிக்காவின் அனைத்துலக உறவுகளுக்கான திணைக்களத்தின் பேச்சாளர் கிளேசன் மொன்யேலா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment