Tuesday, November 27, 2012

தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் மீண்டும் யாழ் பல்கலை கழகத்தில் ஒட்டப்பட்டுள்ளது.

http://uyarvu.com/images/stories/uyarvu-image/images/taminews012/thalaivar%20birthday%202012%205.jpgஇன்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் தமிழீழ தேசியத்தலைவர் மே.த.கு. வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த நாளை ஒட்டிய வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகின்றது.
தேசியத்தலைவர் அவர்களை வாழ்த்தியும் தலைவரைப்பற்றிய வீர வசனத்துடனும் இந்த சுவரொட்டிகள் காணப்படுகின்றது. இந்த சுவரொட்டிகளில் “எமக்கு தன்மானம் பெற்று தந்த தானைத்தலைவா நீ நீடுழி வாழ்க“, “தமிழரின் தங்கத்தலைவனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” போன்ற வாசகங்கள் காணப்படுகின்றது. தலைவர் இராணுவ சீருடையுடனும் கம்பீரமான தோற்றத்துடனும் மிடுக்காக சுவரொட்டிகளில் காட்சியளிக்கின்றார்.


http://uyarvu.com/images/stories/uyarvu-image/images/taminews012/thalaivar%20birthday%202012%203.jpg

நேற்று மாவீரர் வாரத்தினை கொண்டாடும் முகமாக ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் சிங்கள கைக்கூலிகளாலும். தமிழினத்துரோகிகளாலும் கிழித்து எறியப்பட்ட நிலையில் மீண்டும் மாணவர்களால் தலைவரின் பிறந்தநாள் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. மேற்படி ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை தென்இலங்கையில் இருந்து யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு இன்று வருகை தந்திருந்த சிங்கள பல்கலைக்கழக மாணவர்கள் எமது அண்ணனின் கம்பீரமான தோற்றத்தை பார்த்து வியந்து போனதுடன் அந்த சுவரொட்டிகளை புகைப்படம் எடுத்தும் சென்றுள்ளனர்.

மாணவர்களால் மாவீரர் தினம் கொண்டாடுவதனை தடுக்கும் முகமாக நேற்று முன்தினம் தொடக்கம் பல்கலை சுற்றுவட்டாரம் எங்கும் இராணுவ புலனாய்வாளர்களும், தேசத்துரோகிகளும் பல்கலைக்கழகத்தை கண்காணித்த வண்ணமே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை மாணவர்கள் மற்றும் தமிழ் மக்களின் மாவீரதின செயற்பாட்டை குழப்புவதற்கு பல துரோகிகள் இராணுவத்துடன் சேர்ந்து இயங்குகின்றனர். துரோகிகளே நீங்கள் எமது மக்களையும் ஈழத்தையும் காட்டிக்கொடுப்பது உங்கள் அம்மாவையும்,மனைவியையும் மாற்றானுக்கு விற்பதற்கு சமமான செயற்பாடாகும், ஆகவே நீங்கள் எமது மாவீரர்களின் தியாகங்கள், மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து எமது மக்கள் உணர்வு பூர்வமாக மாவீரர் தினத்தை கொண்டாட இடம் கொடுங்கள்.
http://uyarvu.com/images/stories/uyarvu-image/images/taminews012/thalaivar%20birthday%202012%201.jpghttp://uyarvu.com/images/stories/uyarvu-image/images/taminews012/thalaivar%20birthday%202012%204.jpg

http://uyarvu.com/images/stories/uyarvu-image/images/taminews012/thalaivar%20birthday%202012%202.jpg

ஈழத்தில் இருந்து வேந்தன்

No comments:

Post a Comment