தவிர்க்கமுடியாத
காரணத்தினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மலேசியாவிற்கு விஜயத்தினை மேற்கொள்ள
மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு தகவல்
தெரிவித்துள்ளன. அதன்படி இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்கு மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனவே அந்த அழைப்பினை ஏற்று மகிந்த மலேசியாவிற்கு செல்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ள்பட்டிருந்தன
ஆனாலும் தற்போது அவர் தவிர்க்க முடியாத காரணத்தினால் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் போது தமிழ் மக்களைக் கொன்று குவித்த போர்க்குற்றவாளியான மஹிந்த ராஜபக்ஷ, தமிழர்கள் வாழும் மலேசியாவிற்கு வருவதற்கு அரசு அனுமதிக்க கூடாது என அரசு சார்பற்ற இயக்கங்கள் வலியுறுத்தி கண்டன அறிக்கைகளையும் வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment