தமிழ்
தேசிய கூட்டமைப்புடன் பேச்சுக்களை நடத்துவதற்கு அமெரிக்கா
தீர்மானித்துள்ளது. ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின்
அடுத்த அமர்வுக்கு முன்பதாக இந்த வருட தொடக்கத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானத்திற்கு அமைய இலங்கை அரசாங்கத்தினால் எடுக்கப்பட்டுள்ள
நடவடிக்கைகள் தொடர்பாகவே கூட்டமைப்புடன் அமெரிக்கா ஆராயவுள்ளது.இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அடுத்த வருட முற்பகுதியில் அமெரிக்காவிற்கு விஜயத்தை மேற்கொள்ளும் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். அமெரிக்கா அதிகாரிகளுடனான எமது பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இது அமையும் என அவர் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தன் தலைமையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தூதுக்குழுவொன்று அமெரிக்க இராஜாங்க அமைச்சின் அழைப்பின் பேரில் கடந்த வருடம் அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment