சமீபத்தில்
கே.பியை இந்திய உளவுப் பிரிவான சி.பி.ஐ விசாரித்துச் சென்றது என்ற
செய்திகள் வெளியாகியிருந்தது. கொழும்பில் உள்ள பாதுகாப்புச் செயலகத்தில்
இந்த விசாரணை இடம்பெற்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. றோ மற்றும்
சி.பி.ஐ அதிகாரிகள் கே.பியை விசாரித்துள்ளார்கள். விசாரணையின் போது பல
கேள்விகள் ராஜீவ் கொலை தொடர்பாகவே கேட்க்கப்பட்டுள்ளது. இதில் கொலையுடன்
தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்பட்ட, ஒற்றைக் கண் சிவராசா பற்றியும்
கேள்வி எழுப்பியுள்ளனர் சி.பி.ஐயினர். அதென்ன சிவராசாவின் துவக்கு ? ஒரு
கண் தெரியாத அவர் தானா இந்த கொலையின் சூத்திரதாரியாக இருந்தது? பின்னர்,
பெங்களூரில் தற்கொலை செய்துகொண்டாரே அவரா ? என்று கேள்வி கேட்க்கப்பட்டது. ஆம், இந்தியர்கள் ஒற்றைக் கண் சிவராசன் என அழைக்கும் ஆள் தான் அவர். அவரிடம் 9 மில்லி மீற்றர் ரக பிஸ்டல் ஒன்று இருந்திருக்கிறது. இதை நான்தான் சிவராசனுக்கு கொடுத்தேனா என இந்திய புலனாய்வு நிர்வாகம் அறிய விரும்பியது. நான் அதை கொடுக்கவில்லை என்பது வெளிப்படையானது. நான் கொடுக்கவில்லை என அவர்களிடம் கூறினேன். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டது போல தெரிந்தது என்று கூறியுள்ளார் கே.பி. 2010 ம் ஆண்டு, பின்னர் 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் கே.பியை இந்திய அதிகாரிகள் விசாரித்துள்ளார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது
No comments:
Post a Comment