Wednesday, November 21, 2012

கறுப்பு மையால் அழிக்கப்பட்ட பக்கங்கள் புலத்தமிழர் கையில் கிடைத்தது எப்படி; ஐ.நாவிடம் இலங்கை கேள்வி

unationஐக்கிய நாடுகள் சபையின் உள்ளக விசாரணை அறிக்கையில் கறுப்பு மையினால் அழிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்ட சில பக்கங்கள் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும், புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இவ்வாறு தணிக்கை செய்யப்பட்டு அழிக்கப்பட்ட 29 பக்கங்கள் எவ்வாறு அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிடைக்கப் பெற்றன என இலங்கை அரசு ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்த 29 பக்கங்களின் உள்ளடக்கங்கள் தொடர்பிலான தகவல்கள் தமிழீழ விடுதலைப் புலி ஆதரவு அமைப்புகளுக்கும் கிடைக்கப்பெற்றுள்ளன. வன்னிப் போரில் பாதிக்கப்பட்டோர் பற்றி உறுதியான தகவல்களை வெளியிட முடியாது என குறிப்பிட்ட பகுதிகள் தணிக்கை செய்யப்பட்டிருந்தன.
ஐக்கிய நாடுகள் அமைப்பின் அறிக்கை முன்கூட்டியே வெளியானமை ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது என இலங்கை அரசு சீற்றமடைந்துள்ளது.

No comments:

Post a Comment