இலங்கை
இராணுவத்தில் தமிழ்ப் பெண்களை இணைத்த விடயம் பலத்த வாதப் பிரதிவாதங்களை
தோற்றுவித்துள்ளது. அது குறித்து அரசியல் பிரமுகர்கள் வெளியிட்ட கருத்துகள்
வருமாறு:
தம்பர அமில தேரர்
(தலைவர், தேசிய பிக்குகள் முன்னணி)
அரசு வர்த்தமானி அறிவித்தல் எதனையும் விடுக்காது இராணுவத்துக்கு முன்னாள் போராளிகளை இணைத்த விடயம் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இராணுவத்தில் தமிழர்கள் சட்டரீதியாகவே சேர்க்கப்பட வேண்டும்.
(தலைவர், தேசிய பிக்குகள் முன்னணி)
அரசு வர்த்தமானி அறிவித்தல் எதனையும் விடுக்காது இராணுவத்துக்கு முன்னாள் போராளிகளை இணைத்த விடயம் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. இராணுவத்தில் தமிழர்கள் சட்டரீதியாகவே சேர்க்கப்பட வேண்டும்.
கலாநிதி குமரகுருபரன்
தமிழ்ப் பெண்கள் பலவந்தமாக இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டமை தவறானதாகும். அதனால் அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.
கலாநிதி குணதாச அமரசேகர
(தலைவர், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம்)
பலவந்தமாகத் தமிழ் யுவதிகள் இராணுவத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர் எனக் கூறப்படுவது முதல்தரமான பொய்யாகும். தமிழ் இளைஞர்கள் நல்ல நிலையில் இருப்பதை தமிழ்க் கூட்டமைப்பு விரும்பவில்லை.
எம்.ஏ.சுமந்திரன் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்)
தமிழ்ப் பெண்கள் இராணுவத்தில் இணையவேண்டும் என்று இராணுவத் தளபதி வீட்டுக்குவீடு சென்று கட்டளை பிறப்பித்து இதை நிறைவேற்றியுள்ளார். ஏன் இவர்கள் பெண்களை மட்டும் இராணுவத்தில் பலவந்தமாகச் சேர்க்கவேண்டும்? என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.
உதய கம்மன்பில (ஜாதிக ஹெல உறுமய)
தமிழ் யுவதிகள் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டதை கூட்டமைப்பும் மற்றும் சில தமிழ் இனவாதிகளுமே எதிர்க்கின்றனர். நல்லிணக்கத்துக்குத் தடையாக உள்ளவர்கள் யார் என்பது இப்போது நாட்டு மக்களுக்குப் புரிந்திருக்கும்.
No comments:
Post a Comment