யுத்த
வெற்றிக்குப் பின்பு தமிழ் மக்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு சிங்களத்
தலைவர்கள் தயாராக இல்லை என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் இனப்பிரச்சினை தீர்வாக பெடரல், சமஷ்டி முறையினை கூட கொடுப்பதற்கு சிங்கள அரசு தயாராக இருந்தது. இருப்பினும் விடுதலைப் புலிகள் அவற்றை ஏற்றுக் கொள்ளவில்லை.
எவ்வித தீர்வினையும் பெறாமல் விடுதலைப் புலிகள் வீழ்ச்சியடைந்தமை தமிழ் மக்களின் துரதிஷ்டம். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் தமிழ் மக்களுக்கு முறையான தீர்வினை வழங்க முற்பட்டால் ஐக்கிய தேசிய கட்சி சிங்கள வாக்குகளை அபகரித்துக் கொள்ளும் முகமாக எதிர்ப்பினை தெரிவிப்பார்கள்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தீர்வினை கொண்டு வந்த பொழுது அது அதிகபட்சமான அதிகார பரவலாக்கல் என்று ஜே.வி. பியுடன் இணைந்து ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்றத்தில் தீர்வின் பிரதியை தீயிட்டு கொழுத்தியதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து இந்திய வெளியுறவு அமைச்சரின் வருகைக்குப் பின் ஜனாதிபதி தனது வாயாலே 13பிளஸ் கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைப் பெற்றுக் கொள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
அப்பொழுது விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க போன்றவர்கள் 13வது திருத்த சட்டம் அகற்றப்பட வேண்டும் என கூக்குரல் இடவில்லை.
ஒன்றரை வருடங்களுக்கு முன்பு கூட்டமைப்பினர் பாராளுமன்ற தெரிவுக்குழுவிற்குள் சென்றிருந்தால் 13பிளஸ்சைப் பற்றி விவாதித்திருக்கலாம்.
அரசாங்கமும் அதிலிருந்து விலகியிருக்காது இன்று நிலைமை தலைகீழாக போய் விட்டது. 13வது திருத்த சட்டத்தை அகற்ற வேண்டும் என அரச பங்காளி கட்சிகள் மட்டுமின்றி அரசாங்கமும் முற்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்
No comments:
Post a Comment