Sunday, November 25, 2012

ஆபாசப் படம் வைத்திருந்த நபர் சிக்கினார் -பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர்

images 5கணினியில் ஆபாசப்படம் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக்பெரேரா தெரிவித்தார்.
வவுனியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த 16 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரும் அதே இடத்தைச் சேர்ந்த ஒருவரே.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைதுசெய்தனர் என்று எரிக் பெரேரா மேலும் கூறினார்.

No comments:

Post a Comment