Friday, November 23, 2012

ஆயுள்வேத வைத்திய முறைமையை பிரபல்யப்படுத்துவத நடவடிக்கை: பண்டு பண்டாரநாயக்க

parliamentஇலங்கையின் சுதேச ஆயுள்வேத வைத்திய முறைமையை சர்வதேச ரீதியில் பிரபல்யப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சுதேச வைத்தியத்துறை பிரதியமைச்சர் பண்டு பண்டாரநாயக்க இன்று சபையில் தெரிவித்தார்.
பதிவுசெய்யப்பட்ட சுதேச வைத்தியர்களை பாராட்டி கௌரவிப்பதற்கு திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளதென்றும் பிரதியமைச்சர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சுதேச வைத்தியத்துறை மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதியமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment