Sunday, November 25, 2012

கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம்

paruthianna-tk-03பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் வித்துடலுக்கு மக்கள் இறுதி வணக்கம் செலுத்திவருகின்றனர். இன்று காலை 10.00 மணியளவில் மண்டபத்திற்கு அணியத்தினரின் வாத்திய முழக்கத்துடன் வித்துடல் எடுத்து வரப்பட்டது. பொதுச் சுடரினை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் திரு. யோசப் அவர்கள் ஏற்றிவைக்க கைச்சுடரினை கேணல் பரிதி அவர்களின் பெற்றோர் ஏற்றி வைத்தனர். தமிழீழத் தேசியக் கொடியினை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் திரு. பார்த்திபன் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் கேணல்  பரிதி அவர்களின் வித்துடலுக்கு இறுதி வணக்கம் செலுத்திய வண்ணம் உள்ளனர்.

No comments:

Post a Comment